districts

img

நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.1- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரா மன், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பெருமை படுத்துகிறோம் என்கிற பெயரில் எங்கள் சமூகத்தை இழிவு  படுத்தி உள்ளார் என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் விஷ் வகர்மா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்ஒருபகுதியாக சேலம், கோவையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராளானோர் பங்கேற்றனர்.