உடுமலை, ஜன.1- பராமரிப்பில்லாத வீட்டு வசதி வாரிய வீடுகளை சீரமைத்து வழங்கு மாறு விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மருள்பட்டியில், கடந்த 1994 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத் தால் 20ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட்டன. இத்திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 வீடுகள் கட்டப்பட்டன. இதில் ஏ, பி, சி என மூன்று பிரிவில் வீடுகளும், மேல்நிலைத்தொட்டி உட் பட கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத் தப்பட்டன. இந்நிலையில், களிமண் பகுதி யில் கட்டப்பட்ட வீடுகளை ஏலம் விடும் போது சிக்கல் ஏற்பட்டது. மேலும், இக்குடியிருப்பு பகுதிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. தரமில்லாத கட்டுமான பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வீடுகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் 300 வீடுகளும் காட்சி பொருளாக மாறி 20 ஏக்கர் பரப்பில் அமைந்த குடியிருப்பு வளாகம் முழு வதும் பராமரிப்பு இன்றி புதர் மண்டி உள்ளது. இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் வீடுகளை ஏலம் விட முயற்சி மேற்கொள்ளப் பட்டது. ஆனால் போதிய பலன் அளிக்காத நிலையில் வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் உள் ளிட்ட பொருட்கள் காணாமல் போக துவங்கின. தற்போது வீட்டின் சுவர்கள் மட்டுமே காணப்படுகிறது. புதர் மண்டி இடிந்து கிடக்கும் வீடு களில் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளி லிருந்து கழிவுகள் எடுத்து வந்து கொட்டப்படும் இடமாக உள்ளது. முன்னதாக, இப்பகுதியில் வீட்டு மனைகள் கேட்டு விவசாய தொழி லாளர்கள் வருவாய்த் துறைக்கு மனு அளித்துள்ளனர். ஆகவே, வீடு களை சீரமைத்து வழங்க வேண்டு மென விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.