districts

திமுக வேட்பாளருக்கு சிபிஎம் உற்சாக வரவேற்பு

சேலம், ஏப்.4- சேலம் தொகுதி திமுக வேட் பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மக்களவை தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக  வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். இந்நிலையில், சேலம் மாநகராட்சி, 21 ஆவது வார் டுக்குட்பட்ட அரியாக்கவுண்டம் பட்டி, சோளம்பள்ளம் ஆகிய பகு தியில் வியாழனன்று செல்வகண பதி வாக்கு சேகரிக்க வருகை தந்தார்.  அப்போது, அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியாக்க வுண்டம்பட்டி கிளை அலுவலகம் முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்நிகழ்விற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகி ருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஐ. ஞானசெளந்தரி, பொன்.ரமணி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கன கராஜ், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேலு, பி.சந்திரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஜி. கண்ணன் மற்றும் கிளைச் செயலா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.