ஈரோடு, டிச. 28- மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னெடுப்பால், பட் டியலின மக்களுக்கு நிலப் பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து தோப்பூர் கிராமம் உள்ளது. இங்கு 1.28.5 ஹெக்டேரில் 198 பட்டியலின குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். 80 ஆண்டுக ளாக இப்பகுதியில் வசித்து வரும் இம்மக்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. அதேபோல் அந்தியூர், மந்தை மாரி யம்மன் கோவில் தெருவில் குடியிருக்கும் 23 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மனு கொடுக் கப்பட்டும், பலகட்ட போராட்டங்கள் நடத்தி யும், இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப் படவில்லை. இதனிடையே, சத்தியமங்கலம் வட்டம், மலையடிப்புதூர், பெரியார் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டது. அந்நிலத்தில் 98 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை வக்ஃப் வாரியம் தனது நிலம் என உரிமை கோரியதால் பட்டா வைத்துள்ள பட்டி யல் இன மக்களுக்கு நிலத்தின் மீது எவ்வித உரிமை இல்லாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தலையிட்டு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நிலப் பயன்பாட்டை உறுதி செய் திட வேண்டும் என கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று காத்திருக்கும் போராட் டம் நடைபெற்றது. அப்போது, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் பட்டா பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ததீ ஒமு மாவட்டத் தலைவர் பிபி.பழனிச்சாமி, செயலாளர் மா.அண்ணாதுரை மற்றும் மார்க்சிஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அதிகாரிகள் உறுதி அளித் தன் அடிப்படையில் சத்தி, தோப்பூர், பெரி யார் நகர் பகுதியில் பட்டா பெற்ற மக்களுக்கு நிலப்பயன்பாடு புதனன்று வருவாய் கோட் டாட்சியரால் உறுதி செய்யப்பட்டது. அதே போல், மற்ற இரண்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடுத்த சில நாட்களில் பட்டா வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.