நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திருப்பூர், ஜூன் 15- சென்னை வழக்கறிஞர் படுகொலையை கண்டித்து, திருப் பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனியன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவான்மியூரில் வழக்கறிஞர் கெளதமன் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட் அசோசி யேசன், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் அசோசி யேசன் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த 700 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்ய வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
‘மணிமேகலை விருது’ பெற அழைப்பு
சேலம், ஜூன் 15- 2023 – 24 ஆம் ஆண்டிற்கான ‘மணிமேகலை விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது தேர்வுக்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே 2023 – 24 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான முன்மொழிவுகளை ஜூலை 5 ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), இரண்டாம் தளம், அறை எண்: 207 மாவட்ட ஆட்சியரகம், சேலம் 636001 என்ற முகவரியில் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
அணைகள்நிலவரம்
பவானிசாகர் அணை
நீர்மட்டம்:57.71/105 அடி
நீர்வரத்து: 916 க.அடி
நீர் திறப்பு: 155 க.அடி
மேட்டூர் அணை
நீர்மட்டம்: 42.870 அடி
நீர்வரத்து: 149 கனஅடி
நீர்திறப்பு: 1500 கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:13.00/72 அடி
நீர்வரத்து:201க.அடி.
நீர்திறப்பு:107 க.அடி
ஆழியார் அணை:
நீர்மட்டம்:80.40/120அடி.
நீர்வரத்து:268க.அடி.
வெளியேற்றம்:32க.அடி.
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:30.71/60அடி
நீர்வரத்து:7கனஅடி
நீர்திறப்பு:28கன அடி
முட்டை விலை
பண்ணை கொள்முதல் விலை: ஒரு முட்டை ரூ.5.30 (20 பைசா சரிவு)
கறிக்கோழி விலை
பிராய்லர் கோழி விலை: ஒரு கிலோ ரூ.144 (உயிருடன்)