districts

கடன் தொல்லையால் தம்பதியினர் தற்கொலை

கோவை, அக்.27- கடன் தொல்லையால் தம்பதி யினர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.  கோவை மாவட்டம், சூலூர்  பழைய பேருந்து நிலையம் அருகே  வாடகைக்கு குடியிருப்பவர் ராதா கிருஷ்ணன் (65). இவர் தனியார்  நிறுவனத்தில் ஒட்டுநராக உள்ளார்.  இவரது மனைவி பூங்கொடியும் அதே நிறுவனத்தில் வேலை செய்து  வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் திருமணமாகி தனி யாக வசித்து வருகின்றனர்.  இந்நிலையில்,ராதாகிருஷ் ணன் கடன் பிரச்சனையில் சிக்கிய தாகவும், மனைவி பூங்கொடியும் மைக்ரோ பைனான்ஸ் மூலம் மகளிர் கடனுதவி பெற்று நிறைய பேருக்கு கொடுத்துள்ளார். கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி  செலுத்தாத நிலையில் பைனான்ஸ் காரர்கள் இவர்களை பணம்  கேட்டு தொல்லை கொடுத்துள் ளனர்.  சம்பவத்தன்று இரவு 1 மணி வரை தனது மகனுடன் கணவன் மனைவி இருவரும் போனில் பேசி யுள்ளனர். மன வேதனையில் இருந்த ராதாகிருஷ்ணன்,  மனை வியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். காலை வெகு  நேரம் ஆகியும் கதவு திறக்கப் படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இந் நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களது மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மகன்கள் இரு வரும் வந்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்று உள்ளே பார்த்தபோது கணவன்,  மனைவி இருவரும் தூக்கில் சடல மாக தொங்கிக் கொண்டிருந் துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணவன், மனைவி இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரு கின்றனர். கடன் தொல்லை காரண மாக தற்கொலை செய்துகொள் வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.