இந்தியா கூட்டணி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமிக்கு ஆதரவு திரட்ட, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.