districts

img

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவர் கட்டுக

நாமக்கல், அக்.13- தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவர் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் புறநகர் பகுதியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை  அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பாக செல்வ தற்காக சர்வீஸ் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை யில் நாராயண நகர் - அம்மன் நகர் பிரிவு பகுதியில் சுமார் 15 அடி பெரும்பள்ளம் ஒன்று உள்ளது. இந்தப் பள்ளத்தில் அடிக்கடி இரு  சக்கரம் மற்றும் நான்கு சக்கர  வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற் படுகிறது. எனவே, விபத்துக்களை தவிர்ப்பதற்காக 200 மீட்டர் நீளத் திற்கு தடுப்பு சுவர் அமைக்க வலி யுறுத்தி கடந்த ஆறு ஆண்டு களாக ஒன்றிய சாலை போக்கு வரத்து மற்றும் தேசிய நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாவட்ட ஆட்சியர் ஆகி யோருக்கு புகார் மனு அளிக்கப் பட்டது.  ஆனால், புகார் மனு மீது எவ்வித  நடவடிக்கை எடுக்கப்படாவில்லை. இதனால், வெள்ளியன்று காலை திடீரென  பொதுமக்கள், உயிர் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தடுப்புச்சுவர் கட்டாத   ஒன்றிய அரசை கண்டித்து குமார பாளையம் நகர்மன்றத் தலைவர் விஜய கண்ணன் தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு  மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில், உரிய அதிகாரி களுடன் கலந்து ஆலோசனை செய்து தடுப்புச்சுவர் கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல்  கைவிடப்பட்டது.