districts

img

தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா மறைவு

கோவை, ஆக.8- தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா வின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக் குழு அலுவல கத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பின ராகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 2001  ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு  வரை முதலமைச்சராக செயல்பட்டவர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவர்  வயது மூப்பின் காரணமாக வியாழ னன்று காலமானார்.  இவரின் மறைவையடுத்து  நாடு  முழுவதும் உள்ள பல்வேறு அரசியல்  கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இரங் கல் தெரிவித்து வருகின்றனர். தோழர்  புத்ததேவ் பட்டாச்சாரியாவின் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் வியாழ னன்று மாலை இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட் டக் குழு மற்றும் இடைக்குழு நிர்வாகி கள் திரளாக கலந்து கொண்டு தோழர்  புத்ததேவ் பட்டாச்சாரியாவின் திருவுரு வப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்  தூவி மரியாதை செலுத்தினர்.