districts

மலைக்கிராமங்களில் மருத்துவமனைகள் துவங்க வலியுறுத்தல்

தருமபுரி, டிச.1- மலைக்கிராமங்களில் மருத்துவமனை கள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மாவட்டச் செய லாளர் அ.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய மழை, சராசரி அளவை விட மிகக்குறைவாகவே இந்த ஆண்டு பதி வாகியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கும் மழை நீரை சேமித்து, மேலாண்மை செய்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு ஏரி, குளங்கள் கால் வாய்கள் தூர்வார வேண்டும். பென்னாகரம் வட்டம், அலகட்டு மலைக்கிராமத்தில் 13 வயது சிறுமியை விஷப்பாம்புக் கடித்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதியில்லாத தால், சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள் ளார். மலைப்பகுதிகளில் மருத்துவமனை இல்லாமலும், சாலை வசதி இல்லாததாலும்  சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத் தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மற்றும் தொலைதூர மலைக் கிராமங்களில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வாகனங் கள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே, மலைக்கிராமங்களில் உயிர்காக்கும் மருந்து கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள்  இருக்கும் வகையில் அரசு மருத்துவமனை கள் துவக்க வேண்டும். மலைக்கிராமங்க ளுக்கு சாலை வசதிகள் செய்து தரவேண்டும். ஒன்றிய அரசின் ஆட்சேபனைகளை நீக்கி  உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும். மேலும், பால் கொள் முதல் விலையை உயர்த்தி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திலும், தனியார் கொள்முதலிலும் அமல்படுத்த வேண்டும். டிச.13 ஆம் தேதியன்று பாலக்கோட்டில் துவங்கும் கட்சியின் மாவட்ட மாநாட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பொது மக்கள் திரளானோர் கலந்து கொள்ள வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

பென்னாகரம் அருகே உள்ள அலகட்டு மலைக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா – சிவ லிங்கி ஆகியோரின் மகள் கஸ்தூரி (14). இவர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கீரைப் பறித்துக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தலின்பேரில், அலகட்டு கிராமத்தில் விஷப் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி கஸ்தூரியின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது  நிவாரண நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையினை வட்டாட்சியர் லட்சுமி, தனி வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர்.