ஈரோடு, நவ. 8- ஈரோட்டில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன் மின்சா ரம் தாக்கி மரணமடைந்த நிலையில், பெற்றோர் உடலை வாங்க மறுத்து மறி யலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. கொல்லன்கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக உள்ள இவரது மகன் ஹரி சங் கர் (18) தனியார் கலை கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் பயின்று வருகிறார். விடு முறை நாட்களில் சடையப்பன் என்பவர் ஹரி சங்கரை விவசாயம், லேத் வேலைsssssகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இதுபோன்றே ஞாயிறன்று ஹரி சங்கரை லேத் வேலைக்கு சடையப்பன் அழைத்துச் சென்றுள்ளார். வேலை செய்யும் இடத்தில் ஈஸ்வர்ராஜ் மற்றும் ஹரிசங்கர் ஆகியோரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக கொண்டு சென்றுள்ளனர். சோதனை செய்த மருத்துவர் ஹரிசங்கர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் ஹரிசங்கரின் பெற்றோ ருக்கு தெரிவித்துள்ளனர். முன்னதாக, வேலைக்கு அழைத்து சென்று தேவையான பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கவில்லை என்பதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று சிவகிரி காவல் நிலையத்தில் உறவினர்களுடன் சென்று புகார் செய்துள்ளார். புகாரைப் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம். அண்ணாதுரை, மொடக்குறிச்சி இடைக் கமிட்டி செயலாளர் கே.பி.கனகவேல் உள் ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று உறவி னர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.