districts

img

உலக அளவிலான ராக்கெத்லான் போட்டியில் பதக்கங்களை குவித்த கோவை மாணக்கர்கள்

கோவை, ஆக.17- டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு  விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக் கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர் லாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் இந் தியா சார்பாக கோவை மாவட்டம், சூலூர் பகு தியில் உள்ள எம்டிஎன் பியூச்சர் பள்ளியில் பயின்று வரும் ஆதித் மற்றும் ஆதிரை என இருவர் கலந்து கொண்டனர். அண்ணன், தங் கையான இருவரும் லண்டன் மற்றும் நெதர் லாந்தில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண் களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினர். இதில், லண்டனில் நடைபெற்ற 18 வயதிற்கு உட்பட் டோருக்கான கலப்பு இரட்டையர் போட்டி யில் ஆதித் மற்றும் ஆதிரை ஆகியோர் இரண் டாம் இடம் பிடித்து வெள்ளியும், இதேபோல 16 வயதுக்கு உட்பட்டோருக்கான இரட்டை யர் பிரிவில் கிரேட் பிரிட்டன் வீராங்கனையு டன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஆதிரை தங்கம் வென்றார். மேலும், லண்டனில் நடை பெற்ற 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக் கான போட்டியில் தங்கமும் வென்று சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து, நெதர்லாந்தில் நடை பெற்ற 16 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவு போட்டியில் நடப்பு சாம்பியன் ஆதிரை, 16 வய துக்குட்டோர் பிரிவில் தங்கம் மற்றும் 18 வய திற்குட்பட்ட பிரிவில் நடப்பு சாம்பியன் கிரேட் பிரிட்டன் வீராங்கனை பெத்தானி பெய் என்ப வரை வீழ்த்தி தங்கம் வென்றார். பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில், வெண் கலம் பதக்கத்தை தட்டி சென்றனர். கடந் தாண்டு ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சகோதர, சகோதரி என இருவர் சாதித்த நிலையில், தற்போது இந்த ஆண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை  சேர்ந்து 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என  8 பதக்கங்கள் ராக்கெத்லான் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வென்று சர்வதேச அளவில் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.