districts

img

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, செப்.24- கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி  பெற்று, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2023 – 2024க் கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஞாயிறன்று மன்ற அலுவல கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மூத்த வழக் கறிஞர் ச.பாலமுருகன் செயல்பட்டார். இதில் தலைவராக  அ.ர.பாபு (தீக்கதிர்), செயலாளராக பி.ஆர்.முத்துப்பாண்டி  (புதிய தலைமுறை), பொருளாளராக ப.மாரியப்பன் (நியூஸ் 7 தமிழ்), துணைத்தலைவர்களாக சி.ஐஸ்வர்யா (புதிய  தலைமுறை), க.தென்னிலவன் (சன் நியூஸ்), இணைச் செயலாளர்களாக க.காமராஜ் (பிடிஐ தமிழ்), ஜெ. மோகன்குமார் (சன் டிவி), செயற்குழு உறுப்பினர்களாக சங்கீதா (இந்துஸ்தான் டைம்ஸ்), மு.அலாவுதீன் காதர் மீரா (டிரினிட்டி மிரர்), ர.சுகன்யா (சத்தியம் டிவி), எம்.கார்த்திக் (தினகரன்), ர.கிருபாகரன் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்), டி.சதீஷ் (தினகரன்) ஆகியோர்  தேர்வு செய்யப் பட்டனர்.