கோவை, ஜூலை 2- மாநகராட்சியின் வாக்குறுதிப்படி வீடு கட்டித் தர வேண்டும் என்று உக்கட பலம் கட்டு மான பணிகளுக்காக குடியிருப்புகளை இழந்த மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு, கோவை மாவட்டம் உக்கடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவ தற்காக இடம் தேவைப்படுவதால், உக்கடம் சிஎம்சி காலனியில் இருந்த மக்களை அப் புறப்படுத்தினர். அப்போது, மீன் சந்தையை அப்புறப்படுத்தி விட்டு பாலத்துக்கு தேவை யான இடங்களை எடுத்துக் கொண்டு, மீத முள்ள இடங்களில் 520 வீடுகள் கட்டப்படும் என்றனர். இந்நிலையில், பாலத்தின் பணிகள் 99 சத விகிதம் முடிவந்த பின்னரும், தற்போது வரையில் குடியிருப்பை கட்டித்தருவதற் கான எந்த ஆரம்ப கட்ட பணிகளும் நடைபெற வில்லை. பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் தங் கள் கோரிக்கையை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என்று கோவை மாநக ராட்சி அலுவலகத்தை செவ்வாயன்று முற் றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி ஆணையா ளரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதில், உக்கடம் சிஎம்சி காலனியில் சுமார் 200 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வருகி றோம். தூய்மைப் பணியை மேற்கொள்ளும் எங்களுக்கு, மாநகராட்சி ஏற்கனவே உறுதி யளித்தபடி, மீன் மார்க்கெட் விரைவில் அப்பு றப்படுத்தி, அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்துக்கு ஒப்படைத்து, புதிய வீடுகள் கட்டி எங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.