districts

img

அதியமான் கோட்டையில் ரயில்வே மேம்பாலம்

தருமபுரி, அக்.14- அதியமான் கோட்டை பகுதியில் புதிதாக கட்டப் பட்ட ரயில்வே மேம்பா லத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை  தலைமை செயலகத்திலி ருந்து காணொலிக் காட்சி யின் மூலம் தருமபுரி மாவட் டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் புதி தாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை வெள்ளியன்று திறந்து வைத்தார். இதனை  தொடர்ந்து, அதியமான் கோட்டை ரயில்வே  மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி,  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்  ஆகி யோர் போக்குவரத்து சேவையினை தொடங்கி வைத்தனர். பின்னர் பேருந்து பய ணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு களை வழங்கினர்.  இந்த மேம்பாலத்தால் நல்லம்பள்ளி, அதி யமான்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார  பகுதி ஊர்களுக்கு, சேலம் போன்ற பெரு நகரங்களுக்கு காலதாமதமின்றி விரைவில் சென்ற வர முடியும்.  மேலும்  மாணவ, மாண வியர்கள் எவ்வித சிரமம் இன்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு எளிதாக சென்று வர வும், பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று வரவும் ஏதுவாக அமைவதால் ஏரா ளமானோர் பயனடைவர்.  இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்- கோவை வட்டம்) கண்கா ணிப்பு பொறியாளர் ஆர்.சரவணன், தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியா ளர் எம்.ஏ.ராஜதுரை, தருமபுரி நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) உதவிப்பொறியாளர் சர வணன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சி யர் ஆறுமுகம், அதியமான் கோட்டை ஊராட்சி தலைவர் மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.