districts

img

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆவேசம்

 நாமக்கல், ஜூலை 24- ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாய, மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங் கங்கள் ஆவேச போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக தமிழகத்தில் புதனன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசு மூன்று குற்றவி யல் சட்டங்கள் திரும்பப்பெற வேண் டும். ஒன்றிய நிதிநிலை அறிக்கை யில் தொழிற்சங்க கோரிக்கை களை இடம்பெற செய்ய வேண் டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டச் செயலாளர் கபாடி ச.பழனியப்பன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.ஜெயராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன்,  திருவிக சங்கம் (MLF) வைகோ பாலு,  எச்எம் எஸ் மாவட்டத் தலைவர் கலைவா ணன் ஆகியோர் தலைமை வகித்த னர். இதில், வழக்கறிஞர் சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் சேக ரன், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் பி.தனசேகரன், எச்எம் எஸ் மாநில துணைத்தலைவர் செல்வராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் ஐந்து ரோடு, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மூத்த வழக்க றிஞர் கே.ஆர்.மாசிலாமணி, சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, பி.பன்னீர்செல்வம், மாவட்ட செய லாளர் ஏ.கோவிந்தன், தொமுச மாவட்டச் செயலாளர் பொன்னி பழ னியப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.முருகன், எச்எம்எஸ்  மாநில துணைத்தலைவர் பி.கணே சன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா ளர் எம்.நடராஜன், ஏஐசிசிடியு மாவட் டத் தலைவர் வி.பாலு, ஏஐயுடியுசி மாவட்டத் தலைவர் பி.மோகன் உள் ளிட்ட மத்திய தொழிற்சங்க தலை வர்கள், தொழிலாளர்கள் என திர ளானோர் பங்கேற்றனர். தருமபுரி  தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செய லாளரும், அனைத்து தொழிற் சங்க ஒருங்கிணைப்பாளருமான சி.நாகராசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பி னர் சி.கலாவதி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.மாதேஸ்வ ரன், எல்பிஎப் மாவட்டத் தலைவர் கே.அன்புமணி, மாவட்டச் செயலா ளர் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் கே.சிவலிங் கம், மாவட்டச் செயலாளர் சி.சண்மு கம், எச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் எம்.அர்ஜூனன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சிவ ராமன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.