districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பிரியாணி கடை மேலாளர் மீது வழக்குப்பதிவு

கோவை, ஆக.30-  எந்த முன் அனுமதியும் பெறாமல் பெரும் கூட்டத்தை  கூட்டிய பிரியாணி கடை மேலாளர் மீது காவல் துறையினர்  வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே போச்சோ புட்  எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் பெட்டியில் தனியார் நிர்வா கம் விடுதி ஒன்று நடத்தப்பட்ட வருகிறது. சில நாட்க ளுக்கு முன் துவங்கிய இந்த கடையில் பிரியாணி பெல்லி  போட்டி வியாழனன்று நடைபெற்றது. இதில், 6 பிளேட் பிரி யாணி சாப்பிட்டால் ரூ. 1 லட்சம், 4 பிளேட் சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ரூ. 25 ஆயிரம் என அறி விக்கப்பட்டிருந்தது. ஒரு பிளேட் பிரியாணி 600 கிராம் எடை யில் இருந்தது. அரை மணி நேரத்தில் போட்டியில் அறிவித்த அளவிற்கு பிரியாணி சாப்பிட்டு முடிக்க வேண்டும். அனுமதி இலவசம் என அறிவித்து டோக்கன் தந்து போட்டியில் பங்கேற்க வைத்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்க ளில் பரவிய நிலையில் இளைஞர்கள், பெண்கள் என ஏராள மானோர் குவிந்தனர். நீண்ட வரிசையில் பிரியாணி சாப்பிட காத்திருந்தனர். 3 மணி நேரம் மட்டும் போட்டி நடக்கும் என  எதிர்பார்த்த நிலையில் பல ஆயிரம் பேர் குவிந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த னர். இந்த பிரியாணி போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கோவை ரயில் நிலையம் அருகே  உள்ள லங்கா கார்னர் சாலையில் குவிந்தனர். இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை நகரில் மிக முக்கியப் பகுதியான ரயில் நிலை யம் அருகில் இப்படி பொதுமக்கள் குவிந்து பிரியாணி போட்டி யில் பங்கேற்க ஹோட்டல் நிர்வாகம் எந்த விதமான முன் னேற்பாடுகளையும் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும், விடுதி நிர்வாகம் காவல் துறையினரிடம் அனு மதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து  கோவை பந்தய சாலை காவல் துறையினர் அனுமதி இன்றி  ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் கூட்டியதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியதாக விடுதி மேலாளர் கணேசன் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

வீட்டை ஆக்கிமிரத்து கொலை மிரட்டல்; ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் புகார்

சேலம், ஆக.30- வீட்டை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுக்கும்  நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட முதிய வர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார். தமிழ் புலிகள் கட்சியின் சேலம் மேற்கு மண்டல துணைச் செயலாளர் உதய பிரகாஷ் தலைமையில், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (70) வெள்ளியன்று ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். இதன்பின் குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அம்மாபேட்டையை அடுத்த வட்ட நாயக்கர்  காடு பகுதியில் எனக்கு சொந்தமான 1390 சதுர அடி நிலம்  உள்ளது. அதில் ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டியுள்ளேன்.  அங்கு நான், எனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன்  வசித்து வருகிறேன். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த  பாஸ்கர் என்பவர், எங்கள் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு,  எங்களை வெளியேற்றி விட்டார். இதுகுறித்து கேட்டபோது,  தகாத வார்த்தையில் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையம் மற்றும் தமி ழக முதல்வருக்கும் புகார் மனு அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை  நடத்தி, எங்களது வீட்டை அபகரித்துக் கொண்ட நபர் மீது  நடவடிக்கை எடுத்து, நிலத்தையும், வீட்டையும் மீட்டுத்தர வேண்டும், என்றார்.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் பாதியில் நிற்பதாக குற்றச்சாட்டு

ஈரோடு, ஆக.30- பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில், நிதி ஒதுக்கா மல், பாதியில் நிற்பதாகவும் விரைந்து வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அந்தியூரை சேர்ந்த ஒருவர் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் பகுதியில் வசித்து வருபவர் அரப்புளி. இவர், கடந்த 2021-22ஆம் ஆண் டில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளியாகத் தேர்வு செய்யப்பட்டார். மலையாளி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. பணி கள் தொடங்கி 10 அடி சுவர் எழுப்பப்பட்டது. அதன் பிறகு கான்கிரீட் போடாமல் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. அவர்  வசித்து வந்த குடிசை வீடும் இப்பணிகளுக்காக இடிக்கப்பட்டு விட்டது. இதனால் குடிசை அமைத்து அதில் வசித்து வருகி றேன். மழை பெய்தால் ஒழுகுவதால் அதில் இருக்க முடிவ தில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் பாதியில் நின்ற வீட்டின் பணிகளை மீண்டும் தொடரவும், வீடு கட்டித்தரவும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாலங்களை பராமரிக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர், ஆக.30- வெள்ளக்கோவில் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், பாலங்களை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்க உள்ளதால், மழைக்காலத்துக்கு  முன்பாக சாலைகளில் உள்ள பாலங்களில் வெள்ளநீர்  தங்கு தடையின்றிச் செல்ல பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத னைத்தொடர்ந்து, வெள்ளக்கோவில் உட்கோட்ட நெடுஞ்சா லைத்துறைக்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட சிறு பாலங்களை சீர மைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளக்கோ வில் – மூலனூர் சாலை, கரட்டுப்பாளையம் பகுதியில் செவ்வா யன்று சீரமைப்புப் பணி தொடங்கியது. மாநில நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் சத்தியபிரபா மேற்பார்வையில், சாலைப் பணியாளர்கள் பாலங்களின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்திருந்த முட்புதர்கள், செடி கொடிகளை அகற்றி னர். பின்னர் பாலத்துக்கு அடியில் மழைநீர் தேங்கி நிற்காமல்  செல்லும் வகையில் மண் பாதை சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளக்கோவில் - கணபதிபாளையம், கரட்டுப் பாளையம் - மயில்ரங்கம், ஒத்தக்கடை - வேலப்பநாயக் கன்வலசு சாலைகளில் உள்ள சிறு பாலங்களை பராமரிக்கும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பூரில் கடந்த மூன்று ஆண்டில்  ரூ.19.09 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், ஆக.30- திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ சார்பில்  கடந்த மூன்று ஆண்டுகளில் 723 பயனாளிக ளுக்கு ரூ.19.09 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்தார்.  திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பனியன்  ப்ரிண்ட் ஸ்கீரின் தொழில் கடனுதவி பெற்று  பயனடைந்து வரும் பயனாளியின் நிறுவனத் தினை வெள்ளியன்று நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் போது பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்த தாவது, தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப்  பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  ரூ.1,93,284 மானியத்தில் ரூ.5,52,240 பனியன்  ப்ரிண்ட் ஸ்கீரின் தொழில் கடன் பெற்று பயன டைந்து வரும் பயனாளியின் நிறுவனத்தினை  நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக  பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வாழ்வாதாரம் ஏற்ப டுத்திட தாட்கோ சார்பில் கடந்த மூன்று ஆண் டுகளில் பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இலவம்பஞ்சுத் தொழில், போட்டோ ஸ்டுடியோ, மொபைல்  விற்பனை மற்றும் பழுது பார்க்கும் நிலையம்,  கற்பூரம் தயாரித்தல், வாகனக் கடன், எலக்ட் ரிக் கடை, தையல் தொழில், உணவகம், மளி கைக் கடை, ரிப் கட்டிங், செருப்புத் தொழில்,  தளவாடங்கள் கடை, ஆபரண அணிகலன் கடை, கோழி வளர்ப்பு, பிளாஸ்டி பொருட்கள்  தயாரிப்பு, சி.என்.சி லேத் ஓர்க்சாப், பவர் டில் லர், கோன் ரிவைன்டிங், பி.வி.சி.எலக்ட்ரிக்  பேண்ட் தொழில், இரத்த பரிசோதனை நிலை யம், கார்மெண்ட்ஸ், நில மேம்பாட்டுத்திட் டம், பனியன் தொழில், பாத்திரக்கடை, ஸ்டிக் கர் கடை, இரசாயனக் கடை, அரிசி வியாபா ரம் போன்ற பல்வேறு தொழில் புரிய கடனு தவி பெற்று வாழ்வாதாரத்தில் முன்னேற்றம்  அடைந்துள்ளார்கள். அந்த வகையில், 2021-2022 ஆம் ஆண்டில் 187 பயனாளிகளுக்கு ரூ. 4.14 கோடி மதிப்பீட்டிலும்,  2022-2023 ஆம் ஆண்டில் 68 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி  மதிப்பீட்டிலும்,   2023-2024 ஆம் ஆண்டில் 468  பயனாளிகளுக்கு ரூ.11.10 கோடி மதிப்பீட்டி லும் என மொத்தம் 723 பயனாளிகள் ரூ.19.09  கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட் டுள்ளது. என தெரிவித்தார். இந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், தாட்கோ மேலாளர் ரஞ்சித்குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

தரமான உரம், பூச்சி மருந்துகள் வழங்க கோரிக்கை

உடுமலை, ஆக.30- தென்மேற்கு பருவமழைக்கு அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைகள் நிரம்பியதால், விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்க ளுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் குளம், குட்டைகளில் நீர்  உள்ளதாலும், அமராவதி ஆற்றுப்பகுதி மற்றும் திருமூர்த்தி  அணையிலிருந்து தண்ணீர் பெறும் குளத்துப் பாசன விவசாயி கள், நெல் மற்றும் கரும்பு பயிரிட உள்ளனர். மேலும், வாய்க் கால் பாசன விவசாயிகள் தங்களின் விளைநிலத்தில் மக்காச் சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிட உள்ளனர். இதனி டையே, கடந்த முறை பல தனியார் விதை நிறுவனங்களின் தர மில்லாத விதை மற்றும் உரங்களை விவசாயிகளுக்கு விற் பனை செய்ததால், போதிய விளைச்சல் இல்லாமல் பெரிய  அளவில் நஷ்டம் ஏற்பட்டது. தனியார் விதை மற்றும் உர நிறு வனங்களிடம் விவசாயிகள் மீண்டும் ஏமாற்றமடையாமல் இருக்க, விதை மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்களை தரமாக வும், நியாமாகவும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிக ளைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில்  தரமான விதை, உரம் குறித்து அறியாமல், தனியார் நிறுவ னங்களால் பெரிய நஷ்டம் ஏற்பட்ட நிலையில், பயிர் காப்பீடு  உள்ளிட்ட எந்த நிவாணமும் கிடைக்கவில்லை. தற்போது விவ சாயம் செய்ய தரமான இடு பொருட்களையும், தகுத்த ஆலோ சனைகளையும் வழங்க அரசு மற்றும் வேளாண்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

கடமான் வேட்டை: 15 பேருக்கு சிறை 

உதகை, ஆக, 30- கடமானை வேட்டையாடிய 15 பேரை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சோத னைச் சாவடியில் வெள்ளியன்று காவல் துறையினர் வாக னத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர  வாகனத்தில் வந்த பொம்மன் என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வாகனத்தில் கடமான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பொம்மனை சத்தியமங்கலம் வனத்துறை யிடம் ஒப்படைத்தனர். சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் கோத்தகிரி அருகே உள்ள மார்வாளா தனியார் எஸ்டேட் பகுதியில் கடமானை  வேட்டையாடியது தெரியவந்தது. இதனை அடுத்து சத்தி யமங்கலம் வனத்துறையினர் பொம்மனை நீலகிரி  மாவட்டம் கட்டப்பெட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.  வனத்துறையினர் பொம்மனிடம் விசாரணை மேற் கொண்டதில் சுருக்கு கம்பி வைத்து கடமானை வேட்டையாடிய தாகவும், அதன் இறைச்சியை உறவினருக்கு  எடுத்துச் செல் வதாகவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடமான்  வேட்டையில் மேலும் தொடர்புடைய ஆசனூர் பகு தியை சேர்ந்த அர்ஜுனன், ஆட்டுக்குமார், அழகர், ஜடைசாமி,  ஜடையப்பன், ஜான் பிரகாஷ், சந்தோஷ், சின்னப்பன், ஜார்ஜ்,  மாதப்பன், பசவன், சடையப்பெருமாள், மேஸ்திரி குமார், எஸ்டேட் மேலாளர் குமார் ஆகியோரை  கட்டபெட்டு  வனத் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு கோத் தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில்  அடைத்தனர்.

மஞ்சள் தூள் உற்பத்தியில் கலப்படம்?

ஈரோடு, ஆக. 30- மஞ்சள் தூள் உற்பத்தியில் கலப்படம் செய்யப்படுவதாக  வேளாண் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற  கூட்ட அரங்கில் மாதாந்திர வேளாண் குறைதீர் கூட்டம் வெள் ளியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித் தார். இதில். கரும்பு வளர்ப்போர் மற்றும் சக்தி சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதில் மஞ்சள் உற் பத்தியும் ஒன்று. அதனால் மஞ்சள் நகரம் உள்ளிட்ட சிறப்பு  பெயர்கள் உள்ளது. அதுமட்டுமின்றி விரலி மஞ்சளுக்கு புவி சார் குறியீடும் பெற்றுள்ளோம். இந்நிலையில் பல ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையைப் பெற்று வந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு  நல்ல விலை கிடைத்தது. இதனால் மஞ்சள் உற்பத்தி அதிக ரித்துள்ளது. எனினும் குறைந்த அளவே மஞ்சள் விற் பனைக்கு வந்துள்ள போதும், விற்பனை மந்தமாகவே உள் ளது. அடுத்த ஆண்டு வரத்து அதிகமாக இருக்கும் போது  விலையைக் கணிக்க இயலாத நிலை உள்ளது. இந்நிலையில், விவசாயிகளிடம் மஞ்சளை கொள்முதல்  செய்கின்ற வியாபாரிகள் அதனை அரைத்து பொடியாக்கும்  போது அதில் கலப்படம் செய்கின்றனர். குறிப்பாக அரிசியை  பெருமளவு கலந்து அரைத்து வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து மும்பை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இது நமது பெருமைக்கு எதிர்காலத்தில் குந்தகம் ஏற்ப டுத்தும். நியாயமான விலை கிடைப்பதைப் பாதிக்கும். இயற் கையான முறையில் உற்பத்தி செய்து முறையாக விற்பனை  செய்பவர்களையும் பாதிக்கும். எனவே, அக்மார்க் அதிகாரி யிடம் நிலைமையை விளக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனத் தெரிவித்துள்ளனர்.இதில் பல்வேறு விவசாயிகள், விவ சாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2 லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்

தருமபுரி, ஆக.30- தகுதிச்சான்று பெறாமல் இயங்கிய 2 லாரிகள் மற்றும்  2 பொக்லைன் வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர்  விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், முறை யாக சாலை வரி செலுத்தாத, உரிமம் பெறாத வாகனங் கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் சாந்தி உத்தர விட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமையில், சோமன அள்ளி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப்பட்டி வரை வாகன  சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆய்வு  செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2  பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமை யாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தகுதிச்சான்று பெறாமலும், அனுமதியின்றியும் இயக்கிய 2 சரக்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன்  உரிமையாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது.

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

உதகை, ஆக.30- பந்தலூர் அருகே தேவாலா நீர்மட்டம் பகுதியில் ஓடும்  ஆம்புலன்ஸில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந் தது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை  சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ராஜுஷா(19). வியாழனன்று இவ ருக்கு பிரசவ வலி ஏற்படவே, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேரம் பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற னர். அங்கிருந்த மருத்துவர்கள் கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில், ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது  தேவாலா நீர்மட்டம் பகுதியில் பிரசவ வழியால் துடித் துடித்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆம்பு லன்ஸ் ஓட்டுநர் கோபிநாத் மற்றும் ஈஎம்டி கோகுல் ஆகி யோர் பெண்ணிற்கு பிரசவம் பார்த்து, அதன்பின் மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க முடியாமல் அனுப்பிய கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிரச வம் பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ரூ.81.15 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற தீர்மானம்

தருமபுரி, ஆக.30- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 14 வார் டுகளில் ரூ.81.15 கோடியில் புதை சாக் கடை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை  மேற்கொள்வதென நகர்மன்றக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி நகராட்சியின் சாதாரணக் கூட்டம் வியாழனன்று, நகராட்சி அலு வலக அண்ணா கூட்டரங்கில், நகர்மன் றத் தலைவர் லட்சுமி மாது தலைமை யில் நடைபெற்றது. துணைத்தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். நகராட்சி  ஆணையர் புவனேஸ்வரன் தீா்மானங் களை விளக்கிப் பேசினார். இக்கூட்டத் தில், தருமபுரி நகராட்சியில் மொத்தம்  33 வார்டுகள் உள்ளன. இவற்றில் 19  வார்டுகளில் ஏற்கெனவே புதை சாக் கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 வார்டுகளில் ரூ.81.15 கோடி மதிப்பீட்டில் புதை சாக்கடை திட் டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, வங்கியில் ரூ.50 கோடி கட னாக பெற்றுக் கொள்வது எனவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது. அதேபோல காமாட்சியம்மன் தெருவில் செயல்ப டும் நகராட்சி தொடக்கப் பள்ளி வளா கத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி  மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவது, தருமபுரி நக ராட்சி அலுவலகத்தில் ரூ.20 லட்சம்  மதிப்பில் மின்தூக்கி வசதி ஏற்படுத்து வது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் உறுப்பி னர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட் டது. அவற்றில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ஒரு தீர்மானம் நீங் கலாக 36 தீர்மானங்களின் மீது விவா தம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில் நகராட்சி பொறி யாளர் புவனேஸ்வரி, சுகாதார அலுவ லர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.