districts

img

தேர்வு கட்டணத்தை ரத்து செய்திடுக

சேலம், செப்.19- சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தில் தேர்வு  கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத் தினர் மனு அளித்தனர்.  சேலம் பெரியார் பல் கலைக்கழகம் இதன்  இணைவு பெற்ற கலை  மற்றும் அறிவியல் கல் லூரிகளுக்கும் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு வின் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர்களிடம் புதனன்று மனு அளித்தனர்.  இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.பவித்திரன், மாவட்ட துணைத் தலைவர் எஸ். கோகுல், மாவட்ட துணைச் செயலாளர் கு.டார்வின் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப் பினர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.