districts

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஈரோடு, ஜன.31- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகு தியில் இடைத்தேர்தல் வேட்பு மனு  தாக்கல் செவ்வாயன்று தொடங்கி யது. ஆனால், தற்போது வரையில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் வேட் பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜகவிடம் சரணடைந்து கிடப்பது  அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 1.5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த  திருமகன் ஈவெரா மறைவையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 27 ஆம் தேதி வாக்குப் பதிவு நடை பெற உள்ள நிலையில் செவ்வா யன்று வேட்பு மனு தாக்கல் தொடங் கியது. முதல் நாளில் சேலம் மாவட் டம், மேட்டூர் அணையைச் சேர்ந்த கே.பத்மராஜன் (62), கோவை மாவட் டம், சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஏ.நூர் முகமது (63), நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த இரமேஷ் (42) ஆகியோர் சுயேட்சை யாக மனு தாக்கல் செய்துள்ள னர். மேலும், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பிலும், திருப்பூர் மாவட் டம், தேவராயம்பாளையத்தைச் சேர்ந்த வ.தனலட்சுமி (41) என்பவர் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் காங் கிரஸ் கட்சியின் சார்பில்  ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மூன்றாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சியான அதி முகவின் சார்பில் எடப்பாடி பழனி சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடும் என அறி வித்துவிட்டு, இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அதிமுக தொண்டர் கள் கூறுகையில், புரட்சி தலைவர், புரட்சி தலைவி தலைமையில், தமிழ கத்தில் 40 சதவிகிதம் வாக்கு வைத்தி ருக்கிற அதிமுக என்கிற கட்சியை,  ஓரிரு சதவிகிதம் வாக்கு மட்டும் வைத்திருக்கிற பாஜகவிடம் சரண டைந்து கிடப்பது, கட்சியை காப் பாற்ற இவர்கள் முயற்சிக்கவில்லை, இவர்கள் அடித்த கொள்ளையை பாதுகாக்கவே பாஜகவிடம் பம்பிக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி னர்.

;