திருப்பூர், நவ.24- கறிக்கோழிகளின் விற்பனை குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு விலையை குறைத்துள்ளதாக பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் தெரிவித்துள் ளார். இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வாரத் துக்கு ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு கேர ளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், சபரிமலை வழிபாடு, கார்த்திகை தீபம் திருவிழா ஆகிய மாதங்களில் ஆண்டுதோறும் கறிக்கோழி களின் நுகர்வு குறைவது வழக்கம் தான். ஆனால், நடப்பு ஆண்டு முன்கூட்டியே கறிக்கோழிகளின் நுகர்வு குறைந்துள் ளது. விற்பனை குறைவால் கோழிகளை பண்ணைகளில் கூடு தல் நாட்கள் வைத்து பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. எனவே பண்ணைகளில் கறிக்கோழிகளின் தேக்கத்தைத் தவிர்க்க அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பண் ணையில் கறிக்கோழியின் அடக்க விலை ரூ.90 ஆக உள்ள நிலையில், அதனை ரூ.79 ஆக குறைக்கப்பட்டுள்ளது என் றார்.