சேலம், ஆக.2- சேலத்தில் நடைபெற்ற, உலக தாய்ப்பால் வார விழிப்பு ணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி வெள்ளி யன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மருத்துவமனையின் முதல்வர் (பொ) மணிகாந்தன் தலைமை வகித்தார். “குழந்தை களுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உன்னத விஷய மாக தாய்ப்பால் உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற மருந்தாக தாய்ப்பால் மட்டுமே உள்ளது. எனவே குழந்தைகளுக்கு தாய்மார்கள் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும்” என வலியு றுத்தப்பட்டது. இப்பேரணியில் மருத்துவமனையின் கண்கா ணிப்பாளர் ராஜ்குமார், செவிலியர்கள், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.