திருப்பூர், அக்.30 - தீபாவளி பண்டிகை இன்று (அக்.31) கொண்டாடப்படும் நிலையில், திருப்பூர் மாந கராட்சி மற்றும் இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் சட்டப்படி உரிய போனஸ் வழங்கப்படவில்லை. ஒப் பந்த தொழிலாளர்களுக்கு சட்டம் பொருந் தாதா? போனஸ் சட்டத்திலிருந்து இந்தத் தொழிலாளர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக் கிறார்களா? என்று திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க செயலாளர் கே.ரங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் மாவட்டத் தில் உள்ள உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில் மற்றும் திரு முருகன் பூண்டி ஆகிய ஆறு நகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுனர் கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் என ஒப்பந்த அடிப்படையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இந்த தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்குவது குறித்து ஒப்பந்த நிறுவனத்தார் மௌனம் காத்தனர். எனவே இந்த தொழிலாளர்க ளுக்கு சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும், அதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்க ளுக்கு கோரிக்கை விடப்பட்டது. எனினும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இது பற்றி உரிய கவனம் செலுத்தவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களிடம், தொழிலாளர்க ளுக்கு போனஸ் வழங்க அரசு நிர்வாகங்கள் தலையிடவில்லை. இதையடுத்து சிஐடியு சார்பில் திருப்பூர், காங்கேயம், வெள்ளக்கோ யில், திருமுருகன் பூண்டி ஆகிய இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் போனஸ் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளாட்சி நிர்வாகங் களையும், தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அழைத்தார். கடந்த அக்டோபர் 25 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் தொழிலாளர் துறை உதவி ஆணையர், போனஸ் சட்டப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 8.33% குறைந்தபட்ச போனஸ் ஆவது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிற்சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திய போதும், தொழிலாளர் துறை உத வியாளர் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய போதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒப்பந்ததா ரர்களிடம் பேசுவதாக தெரிவித்தனர். எனி னும் உறுதியான நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், மௌனம் காத்து வந்த உள்ளாட்சி நிர்வாகங்களும், வேலை அளிக் கும் ஒப்பந்த நிறுவனங்களும் இந்த தொழிலா ளர்களுக்கு பெயரளவுக்கு சொற்பத்தொ கையை வழங்கி உள்ளனர். போனஸ் சட்டப்படி குறைந்தபட்சம் 8.33 சதவிகிதத்திற்கு குறையாமல் போனஸ் வழங்க வேண்டும். ஆனால் சட்டப்படி போனஸ் வழங்காமல், அடையாளத்திற்கு சிறு தொகையை தருவதை போனசாக நாங் கள் கருதவில்லை என்று சிஐடியு சார்பில் கே. ரங்கராஜ் மறுப்பு தெரிவித்தார். தீபாவளி பண் டிகை கொண்டாடி முடிந்தால் மறந்து விடு வார்கள் என்று நிர்வாகங்கள் நினைத்தால் தொழிலாளர்கள் விட்டுவிடப் போவதில்லை. வரும் நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் போனஸ் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் சட்டப்படி குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியு றுத்துவோம். அதில் தீர்வு காணப்படாவிட் டால் அதற்கேற்ப நாங்கள் அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து முடிவு செய்வோம். நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு, எத்த கைய அசுத்தமான சூழ்நிலையிலும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு, தாகம் தீர்க்க பணியாற்றும் குடிநீர் பணியாளர்களுக்கு, வாகன ஓட்டுநர்க ளுக்கு, சுகாதாரம் பேணிக் காக்க பங்காற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு இந்த நாட்டின் சட்டம் பொருந்தாதா? பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளை சந்திக்கும் தொழி லாளர்கள், இந்த சட்டங்களில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்களா? அரசு நிர்வா கம் பதில் சொல்ல வேண்டும் என்று சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கூறினார்.