districts

பாய்லர் வெடித்து விபத்து: ஓர் ஆண்டாக வழங்கப்படாத இழப்பீடு

திருப்பூர், செப்.9 – திருப்பூரில் தனியார் நிறுவ னத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட தொழி லாளிக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம்  ஓர் ஆண்டாக இழப்பீடு வழங்கா மல் உள்ளது. எனவே பாதிக்கப்பட் டிருக்கும் அந்த தொழிலாளிக்கு உடனடியாக நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்திரவிடும்படி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட தொழி லாளியுடன் சிஐடியு பனியன் சங்கத் தினர் சேர்ந்து கோரிக்கை வைத்த னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்க்கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், தீனுல் இஸ்லாம் மஜித் மற்றும் மதரசா சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாந கராட்சி 4 மற்றும் 5 ஆவது வார்டுக் குட்பட்ட சமத்துவபுரம், பாரதி நகர்,  குமரன் காலனி, ஜே.ஜே. நகர், மே  நகர், திருக்குமரன் அப்பார்ட் மெண்ட், ஜே.ஜே.நகர் அப்பார்ட் மெண்ட், சமத்துவபுரம் அப்பார்ட் மெண்ட், பாரதி நகர் அப்பார்ட் மெண்ட், தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல், வாவிபாளை யம், குருவாயூரப்பன் நகர் உள் ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற் பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகு தியை சேர்ந்த இஸ்லாமியர்கள் இறந்தால் அடக்கம் செய்ய அடக் கஸ்தலம் இல்லை. இதனால், அவி நாசி சாலை எஸ்ஏபி அடக்கத்ஸ்த லத்திற்கு கொண்டு செல்லும் நிலை  உள்ளது. தற்போது அங்கும் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் அடக்கஸ் தலதிற்கு இடம் ஒதுக்கி தர வேண் டும் என கூறப்பட்டுள்ளது.  இழப்பீடு வழங்க கோரிக்கை சிஐடியு பனியன் சங்கப் பொதுச்  செயலாளர் ஜி.சம்பத்துடன், ஆர்.கண்ணதாசன் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, திருப்பூர் மங்க லம் சாலை ஆண்டிப்பாளையத்தில் இயங்கி வரும் ஜெயவர்த்தனா எக்ஸ்போர்ட் கம்பெனியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  அயன் பிரிவில் வேலை செய்து வந் தேன். கடந்த 9.10.2023 ஆம் ஆண்டு  வேலைக்கு சென்றேன். அப்போது கம்பெனி மேலாளர் என்னிடம் பாய்லர் ஸ்டீமை ஆன் செய்ய சொன்னார். எனக்கு பாய்லர் வேலை பற்றி தெரியாதபோதும் மேலாளர் சொன்னதால் பாய்லர் ஸ்டீமை ஆன் செய்தேன். அப் போது திடீரென பாய்லர் வெடித்து  விபத்து ஏற்பட்டது. அதில் எனக்கு  பலத்த காயம் ஏற்பட்டு நினைவி ழந்து விட்டேன். என்னுடன் வேலை  செய்தவர்கள் என்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். எனது உடல் முழு வதும் தீக்காயம் பட்டு வெந்து  போனதையும், இரண்டு கால்களும்  உடைந்து போனதையும் மருத்து வர்கள் மூலம் அறிந்து கொண் டேன். 10 நாட்களுக்கு மேலாக தீவிர  சிகிச்சை பிரிவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன். அப்போது நான் வேலைக்கு செல்லும் வரை எனது மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகள் அனைத்தையும் நிர் வாகம் ஏற்றுக்கொள்ளும். எனவே  எந்த நடவடிக்கைக்கும் செல்ல வேண்டாம் என கம்பெனி முதலாளி  என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் கூறியபடி எனக்கு  உதவி செய்யவில்லை. எனவே எனது வருமானத்தை நம்பி இருந்த  எனது இரண்டு குழந்தைகள் உட்பட  குடும்பமே வாழ முடியாத அள வுக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கியுள்ளோம். எனவே எனக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என கூறப் பட்டுள்ளது. பல்லடம் பேருந்து நிலைய இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத் துமிடம் குத்தகைக்கு விடுவதில் ரூ. 1 கோடி வரை முறைகேடு நடை பெற்றுள்ளது. பல்லடம் நகராட்சிக்கு  வருவாய் இழப்பை ஏற்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட  வேண்டும் என மாவட்ட ஆட்சிய ரிடம் சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பு கோரிக்கை மனு அளித்துள் ளது. தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கனிம வளத்துறை  விதிமுறைப்படி செயல்படாததால், சுற்றுச்சூழல் கெடுவதற்கு காரணமாக உள்ளது.  தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாது காக்க உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையம் லஞ்சம், ஊழலில் ஊறித் திளைக்கிறது. அனைத்து வகையான சுற்றுச்சூழல் அனு மதிகளையும் கேள்வி கேட்காமல் தொடர்ந்து கொடுத்து வருவதும், நிபந்தனைகளை மீறி இயங்கி சுற்றுச்சூழலை கெடுக்கும்போது அதன் மீது நடவடிக்கை எடுப்ப தில்லை. தமிழ்நாட்டில் சுற்றுச்சூ ழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தின் அதிகாரிகளை கூண்டோடு இட மாற்றம் செய்ய வேண்டும். நேர்மை யான அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாது காக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இக்கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் க.கார்த்திகேயன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாது காப்புத்திட்டம்) குமாரராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (நிலம்) மலர், (தேர் தல்) ஜெயராமன், மாவட்ட ஆதிதி ராவிடர் நல அலுவலர் புஷ்பா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி, துணை ஆட் சியர்கள் மற்றும் அனைத்து அர சுத்துறைகளின் அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.