districts

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவை அடித்து விரட்ட வேண்டும்

கோவை, டிச.3- வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கட்சிகளை அடித்து  விரட்ட வேண்டும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித் தார். கோவை கொடிசியா மைதானத் தில் திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, முன்னாள் அமைச்சர் பொங்க லூர் பழனிசாமி, திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட் பட பலர் கலந்து கொண்டனர். திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் கலந்து  கொண்டு பேசுகையில், கோவை யில் கலைஞர் கால் படாத இடமே இல்லை. கோவையில் திமுக ஆட்சி யில் செயல்படுத்திய திட்டங்களை சுட்டிக்காட்டிய உதயநிதி, இளைஞ ரணி மாநாட்டு நிதியாக 3 கோடியே  37 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதா கவும், தமிழகத்திலேயே அதிக நிதி வழங்கியது கோவை மாவட்டம் தான். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வர வில்லை. ஆனால், அதன்பின் ஆட் சிப்பொறுப்பேற்றவர்கள் (அதி முக) பாஜக நிர்பந்தத்தால் நீட் தேர்வை திணித்துவிட்டனர். கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழ் நாட்டில் 22 மாணவர்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் 60 லட்சம் பேர் கையெழுத்திட்ட கடி தங்கள் பெறப்பட்டுள்ளன. அவை  இளைஞரணி மாநாட்டு மேடையில் வைத்து முதல்வரிடம் கொடுக்கப் படும். மேலும், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாண வர்களுக்கும் பொதுத்தேர்வு என  கூறப்பட்டுள்ளது. இது தேவையா?  என கேள்வி எழுப்பிய உதயநிதி, அதன் காரணமாகத்தான் புதிய கல் விக்கொள்கையை திமுக எதிர்க் கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரித்தொகையாக கடந்த  ஒன்பது ஆண்டுகளில் 5 லட்சம்  கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள் ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட் டுமே தமிழகத்திற்கு தந்துள்ளனர். ஆனால், உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ் சாட்டினார். ஒரு கிலோ மீட்டர் தூரத் திற்கு சாலை அமைக்க 250 கோடி ரூபாய் செலவு செய்தது பாஜக அரசு. ஆயுஷ்மான் பாரத் திட்டத் தின் கீழ் இறந்த 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத் துள்ளது பாஜக அரசு. வரும் நாடா ளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளை அடித்து விரட்ட வேண்டும், என்றார்.