districts

தனிமைப்படுத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, மே 15 - கொரோனா தொற்று பரவலை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தனி மைப்படுத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாந கராட்சி ஆணையருக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் தொற்று  சென்னையில் சமூக பரவலாகவும்  மாறி வருகிறது. பரிசோதனைக்குட்ப டுத்தி  தொற்றுள்ளவர்களை தனி மைப்படுத்தும் மையங்களாக பள்ளி  மற்றும் கல்லுரி வளாகங்கள் உள்  ளன. மேற்படி மையங்களில் அடிப்  படை வசதிகளும் உணவும் வழங்கும்  முறையிலும் குறைபாடு உள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றார்கள் மண்டலம் 3க்குட்பட்ட சூரப்பட்டு  வேலம்மாள் பள்ளியில் உள்ள தனி மைப்படுத்தும் மையத்தில் நோயாளி களின் எண்ணிக்கைக்கேற்ப கழி வறை, குளியலறை, படுக்கை வசதி கள் இல்லை. கழிவறை முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. கிருமி நாசினி அடிக்கப்படுவதில்லை. கழி வறையை சுத்தம் செய்ய போதுமான  உபகரணங்கள், சானிடைசர்ஸ் போன்றவை இல்லை என்றும் ஊழி யர்கள் தெரிவிக்கின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மாஸ்க் போன்ற உபகர ணங்கள் வழங்கப்படவில்லை. எனவேதான், அந்தந்த மண்ட லத்திற்குட்பட்ட தனியார் மருத்துவ மனைகளை, கொரோனா தடுப்பு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்று கடந்த 4ந் தேதி  அனுப்பி கடிதத்தில் தெரிவித்தி ருந்தோம்.

கெட்டுப்போன பால் - மிரட்டும் அதிகாரிகள்

நோயாளிகளுக்கு உணவு வழங்க  நியமிக்கப்படடுள்ள தனியார் ஒப்பந்த தாரர் வழங்கும் உணவு தரமானதாக  இல்லை. மே.13 அன்று கெட்டுப் போன பாலை நோயாளிகளுக்கு விநி யோகித்துள்ளனர். இது குறித்து செவி லியர் மற்றும் அதிகாரிகளிடம் நோயாளிகள் கூட்டாக முறை யிட்டுள்ளனர். அங்கிருந்த அதிகாரி புழல் காவல் துறையினரை அழைத்து  நோயாளிகளை மிரட்டியுள்ளனர். உதவி ஆய்வாளர் நோயாளிகளை ‘ரிமான்ட்’ செய்து விடுவதாக மிரட்டி யுள்ளார்.

போனை எடுக்காத அதிகாரிகள்

ஆகவே, மேற்கண்ட குறைபாடு களைப் போக்க உடனே தலையிட்டு  சரிசெய்ய வேண்டும். குறைபாடு களை தெரிவிக்க அழைத்தால் மாந கராட்சி மண்டல அதிகாரிகள் போன் எடுப்பதில்லை. குறிப்பாக 3வது மண்டல உதவி ஆணையாளரை பல முறை அழைத்தும் போன் எடுக்க வில்லை. ஆணையாளராகிய தாங்க ளும் போன் அழைப்பை எடுப்ப தில்லை. இது முறையல்ல. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல  கடிதங்களை அனுப்பிய போதும், அவற்றிற்கு தாங்கள் எவ்வித பதி லும் அளிக்கவில்லை. பொது மக்கள்  மற்றும் அரசியல் கட்சிகளின் ஒத்து ழைப்பில்லாமல் இக்கொடிய பேரிட ரிலிருந்து மீண்டு வருவது சவால் மிக்கதாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

;