உதகை, ஜூலை 28- சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படுவ தால், குன்னூரில் பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட் டம் வியாழனன்று மன்ற அரங்கில், நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஏகராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மணிப் பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டு உயிரி ழந்த மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. இதன்பின் உள்ளாட்சி மன்ற தலை வர்களுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து கவுன்சிலர்கள் பேசுகையில், குன்னூர் மார்க்கெட் பகுதியில் நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் முறையாக நுழைவுவாயில் கதவுகள் இல் லாமல் உள்ளது. பல கட்டடங்கள் இடியும் அபாய நிலையில் உள்ளது. எனவே உடனடி யாக சீரமைத்து தர வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன் பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரு மணம் மற்றும் விழா காலங்களில் பிளாஸ் டிக் பூக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடு ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பூக்களை தடை செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து ஆணையர் ஏக ராஜ் கூறுகையில், நகராட்சி மன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்றி அடுத்த மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை விதிப்பது குறித்து செயல்படுத்த முடிவு செய்வதாக தெரிவித்தார்.