districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சீர்மரபினர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு, ஜூன் 29- ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்ப டுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவியர்க ளுக்கான விடுதிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது, பள்ளி விடுதிகளில் (16+11) 4 முதல் 12 வகுப்பு வரை பயில் கின்ற மாணவ, மாணவியர்களும், கல்லூரி, பாலிடெக்னிக்,  ஐடிஐ விடுதிகளில் (4+4) பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மாணவ, மாணவியர்கள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் விடுதி களில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்க ளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள் ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடை கள் வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங் கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலர் ஆண்டுவ ருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந் தபட்சம் 8 கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும்.  இந்த தூர விதி  மாணவியருக்கு பொருந்தாது.  தகுதியுடைய மாணவ, மாண வியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பா ளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிக ளில் பணிபுரியும் விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகத்தில் 30.06.2022 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல் லூரி விடுதிகளுக்கு 31.07.2022 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் பொழுது அல்லது விடுதியில் சேரும் பொழு தும்  சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமான சான்றிதழ்கள் அளிக்கலாம். இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே  தலா 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீட்கப்படும் குழந் தைத் தொழிலாளர்களை எந்தவித நிபந்தனைகளும் இல்லா மல் சேர்த்துக் கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள் ளார்.

கோவை மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை, ஜூன் 29- கோவை மத்திய சிறையில், கைதிகள்  புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதாக  வந்த தகவலையடுத்து காவல் அதிகாரிகள் புதனன்று காலை திடீர் சோதனை மேற் கொண்டனர். கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட் டுள்ளனர். சிறைக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள் ளது. மேலும், பீடி, சிகரெட் போன்ற புகை யிலை பொருட்களை பயன்படுத்தவும் தடை  செய்யப்பட்டு உள்ளது. இதனை சிறை கண் காணிப்பாளர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர். இதனையும் மீறி சில கைதிகள் செல்போன் மற்றும் புகையிலை பொருட் களை மறைத்து வைத்து பயன்படுத்துவ தாக புகார்கள் வந்தது. இதனையடுத்து காட் டூர் காவல் உதவி ஆணையாளர் வின்சென்ட்  தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர் கள் புதனன்று காலை 6 மணிக்கு கோவை  மத்திய சிறையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட் டுள்ள அறைகள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேரம்  நடைபெற்ற இந்த சோதனையில் தடை செய் யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. திடீரென நடைபெற்ற இந்த சோத னையால் கோவை மத்திய சிறையில் பர பரப்பு ஏற்பட்டது.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த நபர் செவ்வா யன்று வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்த வர் பாலசுப்பிரமணி ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார். இவர் தனது மனைவியை பிரிந்து தனது தாய் மற்றும்  தந்தையுடன் சிட்கோ பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந் தார். செவ்வாயன்று பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் குல  தெய்வம் கோவிலுக்கு சென்று விட்டனர். இந்த சூழ்நிலையில்  பாலசுப்ரமணியம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நி லையில் மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து தனியாக இருந்த  பாலசுப்பிரமணியத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள் ளனர். கோவிலுக்கு சென்ற பெற்றோர் வீடு திரும்பி வந்து பார் த்தபோது ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியம் இறந்து கிடந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறை யினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியு டன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், ஜூன் 29 - சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26 ஆம்  தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் மங்கலம்  சாலை வாகன சோதனை சாவடியில் சென்ட்ரல் காவல்  நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு போதைப் பொருள் பயன்படுத்து வதால் ஏற்படும் தீமைகளை விளக்கி கூறினர். மேலும்  போதைப் பொருளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டேன் மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களையும் பயன் படுத்த விடமாட்டேன் என வாகன ஓட்டிகளை உறுதிமொழி ஏற்க செய்தனர்.

கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி

திரு்பபூர், ஜூன் 29 - திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார் பில் நான் முதல்வன் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. 2021 - 22  ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர் கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல் மற்றும் தங்கள் தனித்  திறனுக்கு ஏற்றவாறு உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த  வழிகாட்டும் நிகழ்ச்சியை மாநில செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.  இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர். இதில் பேசிய செய்தித்துறை அமைச்சர்  தமிழக அரசு மாணவ மாணவியர்களுக்கான பல்வேறு வசதி களை ஏற்படுத்திக் கொடுத்து உயர்கல்வியை குழப்பம்  இல்லாமல் தேர்ந்தெடுப்பதற்கான வழியை ஏற்படுத்திருப்ப தாகவும், மாணவ, மாணவிகள் கல்வியை மட்டும் குறிக்கோ ளாகக் கொண்டு உயர்ந்த பாதையை அடைய வேண்டும் என வும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஸ்டால் கள் மற்றும் கல்வி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையிலான வங்கிகளின் ஸ்டால்களும் அமைக்கப் பட்டிருந்தன.

உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் திடீர் போராட்டம்

திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் உழவர் சந்தைக்கு வந்த விவசா யிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகி றது. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக் கணக்கானோர் வந்து தங்கள் தோட்டங்க ளில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர்  சந்தைக்கு வெளிப்புறமாக பல்லடம் சாலை யில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வியா பாரிகள் சாலையோரமாக கடை அமைத்து  காய்கறிகளை வியாபாரம் செய்வதால், உழ வர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உள்ளே வராமல், சாலையோர வியாபாரிகளி டம் வாங்கிச் செல்லும்நிலை ஏற்படுகிறது. இத னால் உழவர் சந்தை விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுவதாக கூறினர். அதே போல் உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள தினசரி சந்தை காலை 8 மணி முதல்  இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நி லையில் காலை 8 மணிக்கு முன்பாக உழவர்  சந்தை நேரத்திலேயே செயல்படுவதாலும், விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகி றது. மேலும் உழவர் சந்தையில் விவசாயிக ளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள்  எதுவும் இல்லை என குற்றம்சாட்டி விவசா யிகள் புதனன்று காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  அறிவித்திருந்தனர்.  இதையடுத்து விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க நிர்வாகிகள் உழவர் சந்தைக்கு வந் திருந்த நிலையில், நள்ளிரவிலேயே மாநக ராட்சி அலுவலர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையோ ரம் கடை அமைக்காதவகையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், உழவர்  சந்தையின் வசதிகள் குறித்து கோட்டாட்சி யர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்ப டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத் தைக் கை விட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட் சத்தில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப் படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பார்த்தீனியம் செடிகளால்  பொதுமக்களுக்கு இடையூறு

உடுமலை ஜூன் 29-  பார்த்தீனியம் என்னும் களைச்செடி தற் போது விளைநிலங்களில் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பரவி விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு விளைவிக்கிறது.அது வளரும் இடத்தில் வேறு செடிகளை வளர விடாமல் ஆக்கிரமித்து வளரும் குணம்  கொண்ட விஷத்தன்மை வாய்ந்தது செடிகள்  என்பதால் மனிதர்களுக்கும் கால்நடை களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளதால் வீரியமிக்க களைக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண் டிய நிலை உள்ளது. அவ்வாறு பயன்படுத் தும் போது களைக்கொல்லிகளின் வீரியத் தால் வரப் போரங்களில் மண் அரிப்பைக் கட் டுப்படுத்தும் அறுகம்புல் மற்றும் நன்மை தரும் பூச்சியினங்கள் வளர்வதற்கு உதவும்  சிறு தாவரங்கள் உள்ளிட்டனவும் முற்றிலு மாக அழிந்து விடுகிறது. இதனால் பிரதான பயிர்கள் பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட பல் வேறு பாதிப்புகளைச் சந்திக்கிறது.  இந்நிலையில் இயற்கை முறையில் பார்த் தீனியத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அனுபவ விவசாயிகள் வழிகாட்டியுள்ளனர். இதுகுறித்து  விவசாயிகள் கூறியதாவது:    1950-60 ஆம் ஆண்டுகளில் அமெரிக் காவிலிருந்து இந்தியாவிற்குக் கோதுமை மற்றும் உணவு தானியங்கள் இறக்குமதி செய்தபோது பார்த்தீனிய செடியின் விதை களும் கலந்து வந்து விட்டதாகக் கூறப் படுகிறது.இவற்றின் இலைகள் கேரட் செடிக ளின் இலைகளைப் போலக் காணப்படும்.அத னால் இதை கேரட் களை என்றும் கூறுவார் கள்.பார்த்தீனிய விதைகளில் காணப்படும் நச்சுப் பொருட்களினால் மனிதர்களுக்குத் தோல் வியாதி, கண் எரிச்சல், மூச்சுத்திண றல், ஆஸ்துமா உள்ளிட்ட அலர்ஜி நோய்கள்  ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே பார்த்தீனியத் தின் இளம் செடிகளைப் பூப்பதற்கு முன் கையுறை அணிந்து பிடுங்கி ஆழமாகக் குழி  தோண்டி மாட்டுச் சாணம் கோமியம் சேர்த்துப்  புதைக்க வேண்டும். இது மக்கியதும் உரமா கப் பயன்படுத்தலாம்.மேலும் வளர்ந்த செடிக ளைப் பூக்கும் பருவத்திற்கு முன் ஒரு லிட்டர்  நீருக்கு 200 கிராம் சமையல் உப்பு மற்றும் ஒரு  மில்லி சோப்பு திரவத்தினைக் கலந்து தெளித் தும் கட்டுப்படுத்தலாம் என்று கூறினர்.

இந்திய மாணவர் சங்க கிளை மாநாடு

திருப்பூர், ஜூன் 29 – இந்திய மாணவர் சங்கத்தின் 15 வேலம்பாளையம் அரசு  மேல்நிலைப் பள்ளி கிளை மாநாடு புதன்கிழமை நடை பெற்றது. இதில் கிளைத் தலைவராக புவனேஷ், கிளைச்  செயலாளராக ஜிஷ்ணு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அங்கேரிபாளையம் வி.கே.அரசினர் மேல்நிலைப் பள்ளி  இந்திய மாணவர் சங்க கிளை மாநாடு செவ்வாயன்று நடை பெற்றது. இதில் கிளைத் தலைவராக சசிகுமார், செயலா ளராக சூர்யா தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாடுகளில் மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ ஹரி உள்ளிட்டோர் பங் கேற்றனர். பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தரவும், பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கவும் வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 9 ஆக உயர்வு

கோவை, ஜூன் 29- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு  பகுதிகள் 9 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரி வித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100க்கும் மேல் அதிகரித்து  வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறை யினர் சார்பில் பரிசோதனையை அதிகரித்தல், கிருமி நாசினி  தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம், குரும்பபாளை யம் பகுதியில் உள்ள ஒரே வீதியில் 4 பேருக்கும், ஆர்.எஸ்.புரத் தில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வடவள்ளி, தொண் டாமுத்துார், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்கள் மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட் டுள்ளன. இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, பாதிக்கப் பட்டோரை கண்காணிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா  கூறுகையில், கோவை மாவட்டத்தில் தற்போது 9 இடங்களை மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதிகளாக மாற்றப்பட்டுள் ளன. ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால் வீட்டை மட்டும் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வீதியில் பாதிக்கு மேல் எண்ணிக்கை அதிகம் இருந்தால் வீதி முழுவதும் கட்டுப் பாட்டு பகுதியாக மாற்றப்படும். இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர் புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது, என்றார். இந்நிலையில், புதனன்று கோவையில் புதிதாக 85 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ மனைகளில் தற்போது வரை 647 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

சூயஸ் மீது தொடர்ந்து புகார்கள் வெள்ளையறிக்கை கேட்கப்படும்

கோவை, ஜூன் 29–  சூயஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கப்படும் என கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தெரிவித்துள் ளார்.  கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கிழக்கு மண் டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலை மையில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கவுன் சிலர்கள், சூயஸ் நிறுவனம் சார்பாக குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் குழிகள் மூடப்படுவது இல்லை. சூயஸ் மூலம் வழங்கப்பட்டு குடிநீர் இணைப்புகளில் பல இடங்களில் குடி நீர் இணைப்பு விடுப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு ஒரு  முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுக் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தெரு விளக்குகள் பல இடங்களில் இயக்குவது இல்லை என  பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து கிழக்கு மண்டல தலைவர் இலக் குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு வடிகால்களை தூர்வார ரூ.67.30 லட் சம் மதிப்பில் மாநகராட்சியிடம் ஒப்புதல் பெற முடிவு செய்யப் பட்டுள்ளது. சூயஸ் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழு கின்றன. எனவே மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளப்படும் பணிகள், மேற்கொண்ட பணி கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கப்படும். சூயஸ் நிறு வனம் டேங்குகளில் தண்ணீர் ஏற்றுவதில்லை. அந்நிறுவனம் பன்னாட்டு கம்பெனி போல் செயல்படுவதில்லை. டெக்னிக் கல், டைம் மானேஜ் மெண்ட் போன்றவற்றை சரியாக கடை பிடிப்பது இல்லை. மிகவும் மந்த கதியில் பணிகள்  நடைபெறு கிறது. வேலை முடிந்தாலும் குழிகள் மூடுவது இல்லை.  இதனால் போக்குவரத்து இடைஞ்சல், மாநகராட்சி சார் பாக மேற்கொள்ளப்படும் வேலைகள் தாமதம் ஆகிறது. சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிப்ப டைகிறது. அதேபோல் தனியார் நிறுவனங்கள் கேபிள் பதிக் கும்போது என்.ஒ.சி. வாங்கி கொண்டு தான் பணி மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கேபிள் பதிக்க குழிகள் தோண் டாக்கூடாது. கிழக்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் மாநக ராட்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.

விதிகளை மீறி கட்டப்பட்ட தனியார் கட்டிடத்திற்கு சீல்

உதகை, ஜூன் 29- உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத் திற்கு நகராட்சி அதிகாரகள் சீல் வைத் தனர். நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள் ளும் வகையிலும் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, 1993 ஆம் ஆண்டு “மாஸ்டர் பிளான்” சட்டப்படி 7 அடிக்கு மேல் கட்டி டங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதி களில் கட்டிடங்கள் கட்டவும் தடை விதிக் கப்பட்டது. இதன்படி 1993 ஆம் ஆண் டுக்கு பிறகு விதிமுறைகளை மீறி ஆயி ரத்து 337 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ள தாக கணக்கெடுக்கப்பட்டது. இவ்வாறு விதிமுறை மீறி கட்டப்பட்ட பல கட்டி டங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்நிலை யில், கடந்த 1999 ஆம் ஆண்டு கேசினோ சந்திப்பு பகுதியில் விதிமுறைகளை மீறி 3 தளங்களுடன் தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படு கிறது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர் வாகத்தினர் அந்தக் கட்டிடத்திற்கு சீல்  வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தனியார் வணிக வளாகத்தி னர் இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் கூறப்பட்ட தீர்ப்பில், விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டி டத்தை இடிக்க உத்தரவிட்டது.  இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனாலும், வணிக வளாகம் காலி செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து வணிக வளாகத்திற்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில், நகரமைப்பு திட்ட அதிகாரி ஜெயவேல், நகர அமைப்பு திட்ட ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் அதிகாரிகள் சென்றனர். இதற்கிடையே வணிக வளாகத்தின் 3  ஆவது தளத்தில் வழிபாட்டுத்தலம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் வழிபாட்டுத்தலத்தை இடிப்பதாக தக வல் பரவியதால் பொதுமக்கள் ஏராள மானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் நகராட்சி நிர்வாகம் சார் பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வணிக வளாகத் தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்க ளுக்கு மட்டும் சீல் வைக்கப்படும் என் றும், வழிபாட்டு தளத்திற்கு சீல் வைக்கப் படாது என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இத னால் பொதுமக்கள் சமாதானம் அடைந் தனர். இதை தொடர்ந்து நகராட்சி நிர்வா கத்தினர் வணிக வளாகத்தில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் புகாரை முறையாக விசாரிக்காததால் நடவடிக்கை 

கோவை, ஜூன் 28- முறையாக புகார் பெற்று விசாரிக்காததால் கோவை சிங்காநல்லூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர்  திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமிற்கு புகாரளிக்க வந்தார். அப்போது உடல்நல குன்றிய நிலையிலிருந்த அவரிடம் காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் விஷம் அருந்தி விட்டு அங்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை யில், புகாரளிக்க சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்ற போது, முறையாக விசாரிக்காமல் அலட்சியபடுத்திய தாகவும், இதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து புகாரை முறையாக பெற்று விசாரிக்காத சிறப்பு உதவி ஆய் வாளர் சண்முகத்தை, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார்.

 




 

;