districts

img

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடக்கம்

கோவை, நவ.30- கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இட ஒதுக் கீட்டிற்கான கலந்தாய்வு திங்களன்று தொடங்கியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 2020-21 கல்வி ஆண்டுக்கான இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான முதல் சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு சேர்க்கை திங்களன்று நேரடி கலந்தாய்வா கத் தொடங்கியது. இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 14 இடங்களுக்கான கலந்தாய்வில் 12 மாணவ, மாணவியர்களும் மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கான 5 சதவிகித சிறப்பு இடஒதுக் கீட்டில் 38 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு தங்கள் விருப்பக் கல்லூ ரிகளில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்த னர்.  இக்கலந்தாய்வில் வேளாண்மைப் பல் கலைக்கழக பதிவாளர், முதன்மையர் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மாணவர் நலன் தேர்வாணை யர் மற்றும் தொலை தூரக் கல்வி இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;