அடிப்படை வசதிகளின்றி நாள் தோறும் பல்வேறு இன்னலுக்குள் ளாகி வருவதாக, தருமபுரி ஒன்றி யத்திற்குட்பட்ட நேரு நகர் பகுதி பொதுமக்கள் கவலையுடன் தெரி வித்துள்ளனர்.
தருமபுரி ஒன்றியம், செட்டிகரை ஊராட்சிக்குட்பட்டது செட்டிகரை, நேரு நகர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகு திக்கு, ஒகேனக்கல் குடிநீரும் வருவ தில்லை; ஊராட்சி மூலமும் தண் ணீர் விநியோகம் செய்யப்படுவ தில்லை. இப்பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரி யத்தின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் மூலம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைக் கப்பட்டது. ஆனால், இதனை ஒருநாள் கூட மக்கள் பயன்படுத்த வில்லை. ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற் போது நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளாக மாறியுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் ஒகேனக்கல் குடிநீரை நிரப்பி, விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ள வில்லை. இதனால், வீட்டு உப யோகத்திற்கே விவசாயக் கிணறு களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.
இருளில் மூழ்கிய குடியிருப்பு
அரூர், செட்டிகரை பிரதான சாலையில், நேரு நகருக்கு குறுக லான மண் சாலை உள்ளது. இதில் இருசக்கர வாகனம் மட்டும்தான் செல்ல முடியும். விவசாய விளை பொருட்களை நான்கு சக்கர வாகனங்களில் ஏற்றி செல்ல சிர மம் ஏற்படுகிறது. இக்கிராமத்தில் யாருக்கேனும் உடல்நிலை சரி யில்லை என்றால், கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கூட வராத அளவிற்கு சாலையின் நிலைமை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் தெரு விளக்கு இல்லாததால், இக்குடி யிருப்பை இருள் சூழ்ந்து விடுகி றது. மண் சாலையில் நடந்து செல் வோர், பாம்பு போன்ற விஷத் தன்மை வாய்ந்த உயிரினங்களின் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை அமைக்க கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறு கையில், எங்கள் கிராமத்தில் அடிப் படை வசதிகளின்றி பல ஆண்டுக ளாக சிரமப்பட்டு வருகிறோம். ஆகை யால் அரூர், செட்டிகரை பிரதான சாலையிலிருந்து நேரு நகர் வழி யாக, குரும்பட்டி வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும். ஒகேனக் கல் குடிநீர் கிடைக்கவும், வீட்டு உப யோகத்திற்கு ஊராட்சியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களுக்கு மின்விளக்கு பொருத்தி பராமரிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை வலியு றுத்தியுள்ளார்.