திருப்பூர், டிச.20- சட்டமேதை அம்பேத்கரை அவ மதித்த, ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷா பதவி விலக வலியு றுத்தி நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆவேச ஆர்ப்பாட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியலமைப்பு சாசனத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, பாஜக தலை மையிலான ஒன்றிய அரசின் உள் துறை அமைச்சர் அமித்ஷா, டாக் டர் அம்பேத்கரை அவமரியாதை யாக பேசியது, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்திய நாட்டின் முன் மாதிரி தலைவரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண் டும். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்கிற குரல், நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இடதுசாரி கட் சிகள் அமித்ஷாவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்திராஜன் தலைமை வகித் தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், வேலம்பாளையம் நகரச் செயலாளர் நந்தகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் நிறைவுரையாற்றி னார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, கே.ரங்க ராஜ், காளியப்பன், ஜெயபால் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகம் திருப்பூர் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வெள்ளியன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த வழக்கறிஞர் இ.என்.கந்தசாமி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், அகில இந்திய வழக்கறிஞர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பி. மோகன் உட்பட பலர் கலந்து கொண் டனர். கோவை கோவை சிவானந்தா காலனி அருகே டாடாபாத் பவர்ஹவுஸ் பகு தியில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் வெள்ளியன்று நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள் ளியங்கிரி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளா ளர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ஜேம்ஸ், பொருளா ளர் சி.தங்கவேலு உள்ளிட்ட தலை வர்கள் கண்டன உரையாற்றினர்.