districts

23 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்கலாம்

நாமக்கல், மே 31- பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டிலுள்ள 23 கண்மாய்களில் வண் டல் மண் எடுக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா அனுமதி அளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சி யர் ச.உமா தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ச.உமா பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை  அளவு 716.54 மி.மீ. தற்போது வரை  165.78 மி.மீ.மழை பெறப்பட்டுள் ளது. மே மாதம் முடிய இயல்பு மழை யளவை விட 1.58 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. கடந்த ஏப் ரல் மாதம் வரை நெல் 16.5 ஹெக் டர், சிறுதானியங்கள் 221.52 ஹெக் டர், பயறு வகைகள் 2 ஹெக்டர், எண் ணெய் வித்துக்கள் 26.90 ஹெக்டர்,  பருத்தி 704 ஹெக்டர் மற்றும் கரும்பு  53 ஹெக்டர் என மொத்தம் 1021.70 ஹெக்டரில் வேளாண் பயிர்கள் சாகு படி செய்யப்பட்டுள்ளது. தோட்டக் கலைப் பயிர்களில் மரவள்ளி 6 ஹெக் டர் மற்றும் வாழை 2 ஹெக்டர் பரப் பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நெகிழி பைகள் உற்பத்தி செய் யும் இடங்களைக் கண்டறிந்து உற் பத்தி மற்றும் மொத்த விற்பனையை தடை செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ள 23 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து விவ சாயிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்களை அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். தமிழ் நாடு அரசின் அனைத்து திட்ட பயன் களையும் ஒற்றைசாளர முறையில்  விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள் ளது. இந்த வலைதளத்தில் 13 துறை கள் இணைக்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் அர சின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன் அடைய நாமக்கல் மாவட்ட விவசாயி கள் ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பட்டா நகல், ஸ்மார்ட் கார்டு நகல், விவசாயிகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற் றும் கைப்பேசி எண் முதலிய ஆவ ணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம், என்றார்.

;