districts

img

இ-டெண்டர் முறையை ரத்து செய்திடுக: மின் ஊழியர்கள் தர்ணா

கோவை, அக்.20- இ-டெண்டர் முறையை ரத்து  செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட் டம் நடைபெற்றது. இ-டெண்டர் முறையை ரத்து  செய்ய வேண்டும். காலிப்பணியி டங்களில் ஒப்பந்த முறையை புகுத் தக்கூடாது. ஒப்பந்த பணியாளர் களை பணி நிரந்தரப்படுத்த வேண் டும். 2018ல் ஏற்பட்ட ஊதிய ஒப்பந் தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வெள்ளியன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் எம். ஆர்.பெரியசாமி தலைமை வகித் தார். இதில் மாநிலச் செயலாளர் சி. ஜோதிமணி, சிஐடியு மாவட்ட  துணைத்தலைவர் என்.முருகையா, கிளைச் செயலாளர் பி.ஸ்ரீதேவி, சிஐ டியு பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகி பி.சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல கோபி அருகே வேட்டைக் காரன் கோவில் பகுதியில் அமைந் துள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சங்கத்தின் கிளைத் தலைவர் பி. சேகர் தலைமையில் தர்ணா போராட் டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் கே. மாரப்பன், கிளைச் செயலாளர் கே. பாண்டியன், துணைத்தலைவர் ஏ. சக்திவேல், பொருளாளர் ஜோ. வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் வீ. இளங்கோ கண்டன உரையாற்றி னார். இதில் ஏராளமான தொழிலா ளர்கள் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர். கோவை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டு மென சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வெள்ளியன்று கோவை, டாடாபாத் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணாவிற்கு மாநகரத் தலை வர் வி.மதுசூதனன் தலைமை ஏற் றார். இதில், தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் டி.மணிகண்டன், மண்டலச்  செயலாளர் டி.கோபாலகிருஷ் ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.

போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து, மாநில பொதுச்செயலா ளர் எஸ்.ராஜேந்திரன் உரையாற்றி னார். முடிவில், கே.சுந்தரவடிவேல்  நன்றி கூறினார். இதில், மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.காளிமுத்து, சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.சென் னியப்பன், ஏ.சாதிக்பாஷா, எம்.மணி கண்டன், என்.ரத்தினகுமார் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  தருமபுரி தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.விஜயன் முன்னிலை வகித் தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராஜன் தர்ணாவை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் டி.லெனின் மகேந்திரன், இணைச்செயலாளர் கே.ஜெகநாதன், துணைத்தலை வர் எம்.ஆறுமுகம், மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாவட் டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி. விஜயன் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் வி.வெண்ணிலா நன்றி கூறினார்.