districts

img

சத்தியமங்கலத்தில் ஆ.ராசா வாக்கு சேகரிப்பு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா சத்தியமங்கலத்தில் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந் தியா கூட்டணியின் சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் ஆ.ராசா சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கெம்பநாய்க்கன் பாளையம், கடம்பூர், குன்றி மற்றும் தாள வாடி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அவருடன் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்ரமணியன், சி.துரைசாமி, தாலுகாச் செயலாளர் கே. எம்.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எஸ்.முத்துசாமி, ஏ.சகாதேவன், கே.மாரப்பன், பி.சடையப்பன், பி.சுப்பிர மணி, இடைக்கமிட்டி உறுப்பினர் ஏ.பி. ராஜூ, சின்னசாமி, தாயாளு அம்மாள், பழ னியம்மாள், வாலிபர் சங்க செயலாளர் ரங்கசாமி மற்றும் சிபிஐ எல்.சுந்தரம் உள் ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.