districts

img

மதநல்லிணக்க கிருஸ்துமஸ்

கோவை, டிச. 25- ஆனைமலையில் மதநல்லிணக்க கிருஸ் துமஸ் விழா நடைபெற்றது. இதில், இஸ்லாமி யர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண் டாடினர். இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ் துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின் றனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கிறிஸ்துவ நாதர் ஆல யத்தில்  சிறப்பு ஜெப வழிபாடு, கூட்டுப் பிரார்த் தனை ஆகியவை நடைபெற்றது. இதனை யடுத்து கிறிஸ்மஸ் விழாவில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட ஆனைமலை பகுதி யைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்க ளுடன் சேர்ந்து மத நல்லிணக்கத்தை வலியு றுத்தும் வகையில் கேக் வெட்டியும் இனிப்பு கள் வழங்கியும் கொண்டாடினர். இதன்  பின்னர் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்க ளுக்கு கேக் ஊட்டி கிறிஸ்மஸ் வாழ்த்தினை பகிர்ந்து கொண்டனர்.