3 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்
நீலகிரி, ஏப்.16- கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய 3 ஆயிரம் கிலோ குட்கா பண்டல்களை கேரளா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது செய்யப் பட்டனர். கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக தினமும் சரக்கு லாரிகளில் கேரள மாநிலத்திற்கு அத்தியாவசிய மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதில் சில வாகன ஓட்டுநர்கள் காய்கறி மற்றும் உணவுப் பொருள்களுக்கு இடையே மறைத்து வைத்து தடை செய்யப் பட்ட புகையிலை உள்ளிட்ட பொருட்களை கடத்தி செல் கின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று இரவு கேரள எல்லையில் உள்ள வழிகடவு சோதனைச் சாவடியில் போலீசார் நள்ளிரவு திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்த போது உரிய பதிலளிக்கவில்லை. இதில், சந்தேகமடைந்த போலீசார் லாரியில் இருந்த சரக்கு பொருட்களை திறந்து பார்த்தனர். அப்போது பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே குட்கா பண்டல்கள் மறைத்து வைத்து கடத்தி செல்வதை கண்டு பிடித்தனர். பின்னர், லாரியில் இருந்து 3 ஆயிரம் கிலோ குட்கா பண்டல் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் கூறினர். இதுதொடர் பாக பாலக்காட்டை சேர்ந்த ஓட்டுநர் சபிக் (35), உதவி யாளர் அப்துல் ரகுமான் (32) ஆகிய 2 பேரை கைது செய் தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறி முதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழிக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த சிறுத்தை
நீலகிரி, ஏப்.16- கூடலூர் அருகே பெண் சிறுத்தை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவாலா அருகே கோட்ட வயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது தோட்டத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இக்கிணற்றில் இருந்து தான் தினந்தோறும் தண்ணீர் எடுத்து குடும்பத்தினர் பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றபோது கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று உள்ளே இறந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமை யிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப் போது கிணற்றுக்குள் கிடந்தது பெண் சிறுத்தை என்பதும், வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை தண்ணீர் குடிப்ப தற்காக வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், கிணற்றுக்குள் பிடித்து கொள்ள வேறு வழி இல்லாததால் தண்ணீரில் தத்தளித்தவாறு திரிந்த சிறுத்தை சிறிது நேரத்தில், மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்து இறந்த சிறுத் தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்ட தால் வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர். சனியன்று காலையில் முதுமலை புலிகள் காப்பக கால் நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பெண் சிறுத்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பாகங்களை சேகரித்து விட்டு சிறுத்தையின் உடலை தீ மூட்டி எரித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சுமார் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீர் அல்லது இரையை தேடி வந்த போது கிணற்றுக்குள் விழுந்து மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
சரக்கு வாகனம் விபத்து: 220 வாத்துகள் பலி
நாமக்கல், ஏப்.16- வாத்துக்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் வாகனத்தில் இருந்த 220 வாத்துக்கள் உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து 1,200 வாத்துகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூருக்கு சரக்கு வாகனம் சென்றது. வாகனத்தை தருமபுரி, திரு வள்ளுவர் நகரை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, சரக்கு வாகனம் நாமக்கல் மாவட்டம், புதுச் சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 220 வாத்துகள் சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தன. மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி ஓட்டுநர் அஜித்குமார் காய மடைந்தார். இந்த விபத்தால் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து காவலர்கள் மாற்றுப்பாதையில் வாகனங் களை திருப்பி விட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் உயிர் தப்பிய வாத்துகளை மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷூ பண்டிகை கொண்டாட்டம்
நீலகிரி, ஏப்.16- நீலகிரியில் விஷூ பண்டிகையை மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடினர். இந்தாண்டு தமிழ் புத்தாண்டு வெள்ளியன்று கொண்டா டப்பட்டது. சனியன்று விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி களில் மலையாள மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இதனால் விஷூ பண்டிகை ஒவ்வொருவர் வீடுகளிலும் களை கட்டியது. அதிகாலையில் புத்தாடை அணிந்து கொண் டாடினர்.
மரம் அறுப்பு மில்லில் தீ விபத்து
நாமக்கல், ஏப்.16- நாமக்கல் அருகே மரம் அறுப்பு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக் கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்பு மில் வைத்து நடத்தி வருகிறார். இந் நிலையில், மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற் பட்டது. அங்கு இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேக மாக பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து, சாமிநாதன் வேலாயுதம் பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படை யில், தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மரம் அறுப்பு மில்லுக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப் பட்டது. இருப்பினும் மரம் அறுப்பு மில்லில் இருந்த அறுப்பு மிஷின் மற்றும் பல்வேறு மரக்கட்டைகள் தீயில் எரிந்து சேதமாயின.
திருப்பூர் ரயில் நிலைய சரக்கு பிரிவில் வணிக வரித்துறையினர் சோதனை
திருப்பூர், ஏப்.16 - திருப்பூர் ரயில் நிலைய சரக்கு பார்சல் பிரிவில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முறையான ஆவ ணங்கள் இன்றி பிற மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூடை பனியன் ஆடைகள் பறி முதல் செய்யப்பட்டன. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பனியன் ஆடைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தில்லி என இந்தி யாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பிற மாநிலங் களுக்கு பொருட்களை அனுப்ப ரயில் மூலம் அனுப்பினால் சரக்கு கட்டணம் குறைவு மற்றும் நேரம் சேமிக்கப்படும் என்பதால் ஏராளமானோர் ரயில் மூலம் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு முறை யான ஜி.எஸ்.டி பதிவு செய்யாமலும், உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, திருப்பூர் ரயில் நிலைய சரக்கு பார்சல் பிரிவில் வணிகவரித் துறை 5 பேர் கொண்ட பறக்கும் படை குழு வினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பில் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இன்றி பிற மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூடை பனியன் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மூடைகளை ஈரோடு வணிகவரி துறை அலு வலகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வணிக வரித் துறை அலுவலர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் திடீரென பார்சல் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் ரயில் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.
சூதாட்டம் - கைது
கோவை, ஏப்.16- கோவையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாடியவர் களை போலீசார் கைது செய் தனர். கோவை ஆர்.எஸ்.புரம், ஆர்.ஆர்.லே-அவுட்டில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு உதவி காவல் ஆணையாளர் ரவிக் குமார் தலைமையில் போலீ சார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரசாத் (37), சந்தோஷ் குமார் (34), தனபால் (37), விக்னேஷ் (42), கணேசன் (36), ஸ்ரீகாந்த் (47), கணேஷ்குமார் (40), மதன்குமார் (52), அசோக் குமார் (45) சிவக்குமார் (50), மனோஜ் (34), அருண்குமார் (40), செல்வம் (36), கண்ணாமாறன் (48), விஜய சங்கர் (31), கார்த்திக் (33), கிருஷ்ணமுத்து (37), கார்த்திக் குமார் (40) ஆகி யோர் கைது செய்யப் பட்டனர். மேலும், ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் பலர் நகை பட்டறை அதிபர்கள், வியா பாரிகள் என்பது குறிப்பி டத்தக்கது.
பீர் பாட்டில் வெடித்து கண்பார்வை இழந்த டாஸ்மாக் ஊழியர்
கோவை, ஏப்.16- கோவை அருகே பீர் பாட்டில் வெடித்ததில் டாஸ்மாக் விற்பனையாளரின் கண்பார்வை பறிபோனது. கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள திம்மம் பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இக்கடை யில் அங்களக்கரைபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செந்தில்குமார் டாஸ்மாக் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது வாடிக்கையாளர் ஒருவர், செந்தில் குமாரிடம் 2 பீர்பாட்டில்கள் தருமாறு கேட்டார். இதை யடுத்து செந்தில்குமாரும் பாட்டில்களை எடுத்து வந்தார். பின்னர் அந்த பாட்டில்களில் ரூ.10க்கான ஸ்டிக்கர் ஒட்டி னார். ஒரு பாட்டிலில் ஒட்டி, அதனை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பாட்டிலில் ரூ.10க்கான ஸ்டிக் கரை ஒட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பீர்பாட்டில் உடைந்தது. உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி, செந்தில்குமாரின் கண்ணில் பட்டது. இதில் கண்ணாடி அவரது கருவிழியை கடுமையாக தாக்கியது. வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கண் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது, கருவிழியில் கண்ணாடி கடுமையாக தாக்கி யதில் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமாரை கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், உதவி மேலாளர் ஆகி யோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை விரைவாக அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, அதற்கான ஏற் பாடுகளையும் செய்து தருவதாக கூறி சென்றனர். இதற்கி டையே வெயிலின் தாக்கத்தாலேயே பீர்பாட்டில் வெடித்த தாக கூறப்படுகிறது.
இளம்பெண் மரணம்: போலீசில் புகார்
ஈரோடு, ஏப்.16- குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், விலாக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த முருகேசனின் மகள் ரம்யா (28). இவருக்கு மகாலிங் கம் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண மாகி 8 வயதில் நிதர்ஷனா என்ற ஒரு மகள் உள்ளார். பெருந் துறை வட்டம், முத்துகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாகவும், தொடர்ந்து இருந்து வந்த வயிற்று வலியின் காரணமாகவும் கடந்த மார்ச் 18 ஆம் தேதியன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் ஈரோடு 24 கேர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ரம்யாவின் பெற்றோர் வந்து ஊருக்கு அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் 31 ஆம் தேதியன்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்து வந்த ரம்யா, கடந்த ஏப்.13 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். தனது மகளின் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கு மாறு முருசேகன் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
திறக்கப்படாத நகராட்சி பூங்காவால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோவை, ஏப்.16- வால்பாறை நகராட்சி பூங்கா பணிகள் நிறைவடைந்தும், கடந்த மூன்று வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.ஆறரை கோடி செல வில் பொழுது போக்கிற்காக பூங்கா அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள் ளது. தற்போது வால்பாறை பகுதிக்கு தொடர் விடுமுறை கார ணமாக சுற்றுலா பயணிகள் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா திறக்கப்படாததால் ஏமாற்றத் துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், இப்பகுதியில் பூங்கா இருப்பது தெரியாமல், பிற பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண செல்கின்ற னர். தற்போது இந்த நகராட்சி பூங்கா பயன்பாட்டிற்கு இல்லா ததால், அப்பகுதியில் முட்புதர்கள் அதிகளவில் இருப்ப தாலும் வனவிலங்குகளின் புகழிடமாக விளங்குகிறது. இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கவும், நகராட் சிக்கு வருவாய் ஈட்டி தரும் பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னை விவசாயிகளுக்கு அறிவிப்பு
நாமக்கல், ஏப்.16- தென்னை விவசாயிகளுக்கான திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல், விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்க வும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. மேலும், தென்னை சாகுபடி செய்த விவ சாயிகள் பயன்பெறும் வகையில், கொப்பரை தேங்காய் விளைபொருளை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது உள்ளுர் சந்தைகளில், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி குறைந்த பட்ச ஆத ரவு விலையில், (கிலோ ஒன்றுக்கு அரவைக் கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50) கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் திட்டம் பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் செயல்பட்டு வரு கிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், தங்க ளது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற் றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் மேற் குறிப்பிட்ட விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். (அலைபேசி எண்: பரமத்தி வேலூர் - 97863 14460, நாமகிரிப்பேட்டை - 9566647333 மற்றும் திருச்செங் கோடு - 9789215361) மேலும், கொப்பரை தேங்காய் விளை பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கொள்முதல் காலம் ஏப்ரல் 2023 முதல் செப்டம்பர் 2023 வரை நிர்ணயம் செய்யப்பட்டு, தற் போது கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தென்னை விவசாயிகளின் நலன் கருதி மேற்கொண்டுள்ள இத்திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
அன்னூர், ஏப்.16- அன்னூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீசார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிர்வேல் என்பவர், செய்தி சேகரிக்க முற்பட்டார். அப்போது மது போதையில் இருந்த நபர் ஒருவர் ஆவேசத்துடன் செய்தியாளரை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயற்சித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் கதிர்வேல் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பதும், மது போதை தலைக்கேறிய நிலையில் காரை இயக்க முடியாமல் சாலையின் நடுவே நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்திரசேகரின் காரை பறிமுதல் செய்தனர்.
பெண்களை கிண்டல் செய்த நபர் கைது
கோவை, ஏப்.16- கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியை சேர்ந் தவர் சந்திரசேகர் (45). இவர் பெயிண்டிங் கான்ட்ரக்டராக பணியாற்றி வருகிறார். இத னிடையே புலியகுளம் காளி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இவர் கோயிலுக்கு வந்த பெண்கள் சிலரிடம் கேலி கிண்டல் செய்து பேசியுள் ளார். இதுதொடர்பாக அந்த பகுதி பெண்கள் ராமநாத புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.