திருப்பூர், பிப்.15- காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதி களில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் நடை பெற்ற சாலை விபத்துகளில் 981 பேர் உயிரிழந் துள்ளனர். காவல் துறை மற்றும் வட்டார போக்குவ ரத்து அலுவலக பதிவேடுகளின்படி, காங்கே யம் வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளகோ வில், படியூர், சிவன்மலை, ஊதியூர் பகுதிக ளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துகளில் திருப்பூர் மற்றும் பல்லடம் வட் டாரத்தை விட அதிகம் பேர் உயிரிழந்திருப் பது தெரியவந்துள்ளது. காங்கேயம் வட்டாரத்தில் ஆவணங்கள் படி 2017ஆம் ஆண்டு 155 பேர், 2018ஆம் ஆண்டு 174 பேர், 2019ஆம் ஆண்டு 182 பேர், 2020ஆம் ஆண்டு 163 பேர், 2021ஆம் ஆண்டு 147 பேர், 2022 ஆம் ஆண்டு 160 பேர் உயிரிழந்தி ருக்கிறார்கள். 2020, 2021 ஆகிய இரு ஆண்டுக ளில் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப் பட்டு, சில மாதங்கள் போக்குவரத்து கட்டுப்ப டுத்திய நிலையைக் கணக்கிட்டால் இந்த உயி ரிழப்புகள் அதிகம் என்பதை அறியலாம். திருப்பூரில் இருந்து காங்கேயம், வெள் ளகோவில் வழியாக கரூர், திருச்சி செல்லும் சாலை அதிகளவில் கனரக வாகனங்கள் செல் லக்கூடியதாக உள்ளன.
இந்த சாலை ஓரங்க ளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவ ரத்து குறியீடுகள் இல்லாமல் கனரக வாகனங் கள் நிறுத்தப்படுகின்றன. அத்துடன் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அதிவேக மாகச் செல்வதாலும், சாலையின் மையத் தடுப்பரண் இல்லாமல் இருப்பதாலும் அதிக ளவில் விபத்து நடைபெறும் சூழல் உள்ளது என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின் றனர். அத்துடன் இந்த வட்டாரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத் திற்கும் மேலாக சட்டவிரோதமாக மதுவிற்ப னையில் ஈடுபடுவதாகவும், இங்கு வந்து செல் லக்கூடியவர்கள் மது போதையில் விபத்தில் சிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாகவும் இப்ப குதியைச் சேர்ந்தோர் கூறுகின்றனர். காங்கேயம், வெள்ளகோவில் வட்டாரத் தில் ஓலப்பாளையம், காடையூரான் வலசு, கொளிஞ்சிவாடி, வெள்ளமடை ஆகிய பகுதி கள் அதிக விபத்துகள் நேரும் பகுதிகளாக உள்ளன. காவல் துறையினர் இப்பகுதியில் கூடுதல் ரோந்து செல்வது, போக்குவரத்து தடுப்பரண்கள், முன்னெச்சரிக்கை அடையா ளங்கள் அமைப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சசாங் சாய் கூறுகையில், கோவை, திருச்சி ஆகிய இரு முக்கிய நகரங் களை இணைக்கக்கூடிய சாலையில் காங்கே யம், வெள்ளகோவில் பகுதி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்திலேயே இப்பகுதி அதிக விபத்து உயிரிழப்பு ஏற்படக் கூடியதாக இருக் கிறது. இதைத் தடுப்பதற்கு பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் உரிய பலன் அளிக்கவில்லை. அதேசமயம் சாலை நெடுக பிளாஸ்டிக் தடுப்புகள் அமைத்து அதில் ஒளிரும் விளக்குகள் பொருத்துவதற் கான திட்டம் உள்ளது. இதன் மூலம் இந்த சாலையில் வாகனங்கள் விபத்தில் சிக்கு வதை தவிர்க்க முடியும், என்று கூறினார். அதேசமயம் இந்த பகுதிகளில் விபத்தில் சிக்குவோரை உடனடியாக அவசர சிகிச் சைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தற்போது வசதி இல்லை. கோவை அல்லது திருப்பூருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் பலர் வழியி லேயே உயிரிழக்கும் நிலையும் உள்ளது. தற் போது காங்கேயம் அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது. இப்பணியை விரைந்து செயல்பாட் டுக்கு கொண்டு வருவதன் மூலமும் இப்ப குதியில் விபத்து உயிரிழப்புகளை பெரும ளவு குறைக்க முடியும் என்று சமூக ஆர்வலர் கள் நம்பிக்கை தெரிவித்தனர்.