திருப்பூர், மே 4- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் ஊராட்சி ஒன்றியத் தில், ரூ.7.90 லட்சம் மதிப்பீட்டில் மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று பொதுகழிப்பிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ. லட்சுமணன் தலைமையில், வெள்ளகோயில் ஊராட்சி ஒன்றியம், வேலம்பாளையம் ஊராட்சி முருகம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.7.90 லட்சம் மதிப்பீட்டில் மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் பொதுகழிப்பி டம் கட்டும் பணியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்ட லத்தலைவர் இல.பத்மநாபன், வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் செந்தில்கு மார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.