சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 62 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று ஸ்ரீவள்ளியப்பா கலை அரங்கில் நடைபெற்றது. இதில், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.குழந்தைவேலு, கோவை வீரபத்ரசுவாமி ஆகியோர், முதல் 5 இடங்களைப் பெற்ற 60 மாணவ, மாணவியர் உட்பட 851 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.