districts

img

பட்டாசு குடோனில் தீ விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு

தருமபுரி, பிப்.24- தருமபுரி அருகே நாட்டு வெடி  பொருட்கள் உற்பத்தி செய்யும் பட் டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத் தில் மூன்று பெண்கள் உடல் கருகி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம் கம்பை நல்லூர் அடுத்த சின்னமுறுக்கம் பட்டியில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு  சொந்தமான நாட்டு வெடிபொருட் கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது.  வழக்கம் போல குடோனில் செண்பகம், திரு மலர் உள்பட நான்கு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிற் பகல் நேரத்தில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாக, வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்த நான்கு பேரில் செண்பகம் திருமலர் உள் பட மூன்று பெண்கள் உடல் சிதறி  சம்பவ இடத்திலேயே துடி துடித்து  உயிரிழந்தனர். இதில் மீதமுள்ள ஒருவர் மதிய உணவிற்காக வெளியே சென்றதாக கூறப்படு கிறது.  தகவலறிந்த கம்பைநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஆறுதல் இதுகுறித்து தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், எதிர் பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமி சமுத்திரத்தைச் சேர்ந்த .திருமலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், .செண்பகம் (வயது 35) க/பெ.மேக நாதன் மற்றும்  திருமஞ்சு (வயது 33)  க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண் கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர் என்ற துயரமான செய்தியைக்  கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வே தனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கும் அவர் களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத் தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள் ளார்.