districts

கடன் தருவதாக கூறி  ரூ.10 லட்சம் மோசடி - 2 பேர் கைது

கோவை, ஏப்.1- கோவையில் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது  செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி. இவர் உலர்பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து  வருகிறார். தொழில் நிமித்தமாக கடன் பெற முயன்ற போது, அவருக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றில் கமிசனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் என கூறப்பட்டிருந்தது. இதை யடுத்து, அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது கோவை யைச் சேர்ந்த கவுதம் என்பவர் பணம் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதற்காக தனக்கு 25 லட்சம் ரூபாய் கமிசன் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட நிலையில், தனது மகன் ரமணா என்பவர் மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.  இதன்பின்னர், அப்பணத்தை ஒரு குறிப்பிட்ட இடத் தில் வரச்சொல்லி இரண்டு நபர்கள் பெற்றுச் சென்றுள்ள னர். ஆனால், அதற்கடுத்து அவர்கள் கூறியபடி ஒரு கோடி ரூபாய் கடன் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாய மான இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த ஜனகன்(42) மற்றும் செட்டிபாளை யத்தை சேர்ந்த மார்டின் அமல்ராஜ்(42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;