districts

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

ஈரோடு, மார்ச்  26- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலை யில் ஈரோட்டில் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழு தினார்கள்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாயன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 26 ஆயிரத்து 99 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 25 ஆயிரத்து 226 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஈரோட்டில் அனுமதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 227 பேரில் 9 ஆயிரத்து 32 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். கோபியில் 159  பேரும், சக்தியில் 139 பேரும், பெருந்துறையில் 69 பேரும்,  பவானியில் 73 பேரும், அந்தியூரில் 80 பேரும், தாளவா டியில் 158 பேர் என மொத்தம் 873 பேர் தேர்வு எழு தவில்லை.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

கோவை, மார்ச் 26- கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நீலாம்பூரில் சைதன்யா என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பட்ட ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், செவ் வாயன்று காலை இப்பள்ளி வாகனம் வழக் கம்போல பட்டணம் பகுதியிலிருந்து சஞ்சய்,  திவ்யா, தனிஷ்கா, பிரணவ் ஆகிய 4 மாண வர்களை ஏற்றிக்கொண்டு, நாகம்மநாய க்கன்பாளையம் வழியாக சென்று கொண்டி ருந்தது. அப்போது, ஜே.ஜே. நகர் அருகே  மண் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாக னத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் வலது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றார். அப்போது, வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவர்கள் கயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீரபாண்டியில் தேர்தல் பணிமனை திறப்பு

சேலம், மார்ச் 26- சேலம், வீரபாண்டியில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனையினை திமுக  மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் திறந்து வைத்தார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி ஒன்றியக் கழக தேர்தல் பணி மனையினை, சேலம் கிழக்கு மாவட்ட கழக  செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் திறந்து வைத்தார் இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டி ஒன்றியச் செயலாளர் எஸ்.வெண்ணிலா, மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன், அவைத்தலைவர் முருகன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.