திருப்பூர், பிப். 22 – திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்ரவரி 21 ஆம் தேதி சிவப்புப் புத்தக தினத்தை முன் னிட்டு 55 இடங்களில் இந்து ராஷ்டிரம் என் றால் என்ன? என்ற தலைப்பில் சீத்தாராம் யெச்சூரி எழுதிய புத்தகத்தை சுமார் ஆயி ரம் பேர் வாசித்தனர். உலக சிகப்புப் புத்தக தினத்தை முன் னிட்டு தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி 1993ஆம் ஆண்டு எழுதிய “இந்துராஷ்டிரம் என்றால் என்ன? என்ற நூலை 1000 மையங்களில் ஒரு லட்சம் பேர் வாசிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட் டத்தில் இந்த புத்தக வாசிப்பு இயக்கம் நடத் தப்பட்டது. திருப்பூர் மாநகரம், ஒன்றியம், வேலம்பாளையம், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கேயம், தாராபுரம், உடுமலை நகரம், ஒன்றியம், குடி மங்கலம், மடத்துக்குளம் மற்றும் தனியரங் கங்கள் மூலம் புத்தக வாசிப்பு நடத்தப்பட் டது. மொத்தம் 55 மையங்களில் 224 மார்க் சிஸ்ட் கட்சி கிளைகளில் இருந்து இளை ஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் பஙகேற்றனர்.