தருமபுரி, ஆக. 22- நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், பாப்பிரெட்டிப் பட்டி பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெடிப்பட்டி வட்டத்தில் கடந்த 4 மாதங்களாக நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வில்லை. வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமை யாக வேலை வழங்க வேண்டும். ஒன்றிய பட் ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் வேலை நாட்கள் 200 நாட் களாகவும், தினக்கூலியை ரூ 600 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதிற்கு வட்டத் தலைவர் வி. செல்வம் தலைமைவகித்தார். இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் பி.கிருஷ் ணவேணி, இ.கே.முருகன், ஒன்றியச் செய லாளர் எம்.கணேசன், ஒன்றியப் பொருளாளர் விஜி, ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிபேசினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டச்செயலாளர் தி.வ.தனுசன் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் பங்கேற்றனர்.