districts

img

தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நான்காவது ஆண்டாக தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 17.97 லட்சம் மாணவர்களும், தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் மாணவர்களும் நீட் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு தமிழகத்தில் 1.39 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அப்போது 139 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஒரு தேர்வு அறையில் குறைவான மாணவர்களே தேர்வு எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால், இந்தாண்டு 1.17 லட்சம் மாணவர்களுக்காக 238 தேர்வுமையங்களாக கூடுதலாக்கப்பட்டுள்ளன. 

ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வந்தனர். மேலும், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் போதே முகக்கவசம் அணிந்து வந்தனர். மாஸ்க் அணியாதவர்களை மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு கை சுத்திகரிப்பான வழங்கப்பட்டது. முன்னதாக தேர்வு மையங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. ஒரு வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இந்த நிலையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 
 

;