கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கல்யாணகுமார் என்பவரின் சொந்த ஊரான நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், அம்பேத்கர் நகரில் உள்ள அவரது குடும்பத்தினரை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் புதனன்று நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, இழப்பீடு தொகையான ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு உள்ளிட்டோர் உடனிருந்தார்.