districts

img

கிருஷ்ணகிரி தொகுதியில் கே.கோபிநாத் அமோக வெற்றி

கிருஷ்ணகிரி,ஜூன் 5- கிருஷ்ணகிரி மக்கள வைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 4லட்சத்து 92ஆயிரத்தி 883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத், அதிமுக வேட்பாளா் ஜெயபிரகாஷ், பாஜகவின் நரசிம்மன், நாம் தமிழா் கட்சி வித்யாராணி வீரப்பன், சுயேச்சை வேட்பாளா்கள் 27 போ் போட்டியிட்டனா்.

கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்பக் கல்லூ ரியில் ஜூன்4 அன்று வாக்கு எண்ணிக்கையில் 29 சுற்றுகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டது.முதல் சுற்றிலி ருந்தே காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் முன்னிலையில் இருந்தார். அஞ்சல் வாக்குகள் உட்பட 29 சுற்றுகள் முடிவில் கே.கோபிநாத் 4,92,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளா் ஜெயபிரகாஷ் 3,00,397 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை விட 1,92,545 வாக்குகள் கூடு தலாக பெற்று வெற்றி பெற்றார். இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரசிம்மன் 2லட்சத்து 14ஆயி ரத்தி 152 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றார். நாம் தமிழா் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 1லட்சத்து 7ஆயி ரத்தி 83 வாக்குகள் பெற்று 4 ஆம் இடம் பிடித்தார்.  10,961வாக்குகள் நோட்டா வுக்கு போடப்பட்டிருந்தது.

வெற்றி பெற்ற காங்கி ரஸ் வேட்பாளர் கே. கோபி நாத்துக்கு இரவு 9 மணிக்கு தேர்தல் ஆணையர் கே.எம் .சரயுவெற்றிச் சான்றிதழை வழங்கினார். நிகழ்வில் திமுக கிழக்கு மாவட்டச் செய லாளரும்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன்,திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பின ருமான ஒய்.பிரகாஷ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன் உள்ளிட்ட 24 வேட்பாளா்கள் தங்கள் தோ்தல் வைப்புத் தொகையை இழந்தனா். அதேபோல் 23 வேட்பாளர் கள் நோட்டாவை விட மிக குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.