கிருஷ்ணகிரி,ஜன 23- வேப்பணப்பள்ளி அருகே 8 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்து தலைமறைவான தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேப்பனப்பள்ளி அருகே அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழி லாளி நேருவுக்கு ஒரு ஆண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த அவரது எட்டு வயது மகளிடம் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டு ள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நேரு அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். தகவலறிந்த அவரது தாய் குழந்தையை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததுடன், கிருஷ்ண கிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கனவன் மீது புகார் அளித்தார். அதனடிப்படையில் தலைமறை வான நேருவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பழையூரில் எருது விடும் விழா