districts

img

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டட தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க,வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணகுமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திய கூட்டு ஆய்வு நடத்தினர்.

இதனையடுத்து தடையில்லா சான்றிதழ் வழங்க வேலூர் மண்டல துணை இயக்குனர் சரவணகுமாருக்கு பணம்  வழங்க வேண்டும் என கூறி காஞ்சிபுரம் மாவட்ட  தீயணைப்புத்துறை அலுவலர் குமார், தனியார் மருத்துவக் கல்லூரி  பிரதிநிதியிடம்  மூன்று லட்ச ரூபாய்  லஞ்ச பணத்தை கேட்டு, முதல் தவணையாக  ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை  அட்வான்ஸ் ஆக கேட்டுள்ளார். அந்த வீடியோவில் எதிரில் இருப்பவர் 2 இலட்சம் ரூபாய் தருகிறோம்  என பேரம் பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது .

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தீயணைப்பு துறையினரிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோதும் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

;