districts

img

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாலிபர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஆக. 17 - காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.  சங்கத்தின் 15ஆவது மாநாடு போந்தூ ரில் தோழர் அசோக் நினைவரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் ப.வடிவேலன் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் கே.செல்லப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் சரவணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார்  வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.லெனின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணை செயலாளர் எஸ்.மஞ்சுளா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். திருப்பெரும்புதூர் வட்டச் செயலாளர் ஆர்.சுகுந்தன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
திருப்பெரும்புதூரில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடங்கல் பிரியும் இடத்திலும், ராஜீவ் காந்தி நினைவிடம் எதிரிலும் மேம்பாலப் பணியை உடனே துவங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ18ஆயிரம் உறு திப்படுத்த வேண்டும், உள்ளூர் இளைஞர்க ளுக்கு தொழிற் சாலைகளில் பணிசெய்ய முன்னுரிமை வழங்க வேண்டும், காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்து வர்களை பணியில் அமர்த்திட வேண்டும்,  போதை பொருட்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், பெண்கள், சிறுமி களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
19 பேர் கொண்ட மாவட்டக் குழுவிற்கு தலைவராக டி.எல்.கார்த்திக், செயலாளராக எஸ்.உதயக்குமார், பொருளாளராக ஆர்.சுகுந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;