districts

img

மண்ணச்சநல்லூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் வாலிபர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக.20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி  புறநகர் மாவட்ட 18-வது மாநாடு வெள்ளி யன்று மண்ணச்சநல்லூர் தனலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை மாவட்ட துணைச் செயலாளர் பிரியசித்ரா ஏற்றினார்.  அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் ஜார்ஜ் வாசித்தார். மாநிலத்  தலைவர் ரெஜீஸ்குமார் துவக்கவுரையாற்றி னார். வேலை அறிக்கையை மாவட்ட செயலா ளர் நாகராஜ் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் ஆணைமுத்து சமர்ப்பித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் லெனின், அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் ரங்கராஜன், மாதர் சங்க மாவட்ட துணைச்  செயலாளர் விசாலாட்சி ஆகியோர் வாழ்த்துரை  ஆற்றினர். மண்ணச்சநல்லூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு துறை களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மண்ணச்சநல்லூர், ஓமாந்தூர், சிறுகாம்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். திருவெள்ளறை பகுதி யில் புதிய அரசு மருத்துவமனை அமைக்க  வேண்டும். மண்ணச்சநல்லூரில் ஒருங்கி ணைந்த சார்பு நீதிமன்றம் மற்றும் விளை யாட்டு பூங்கா அமைக்க வேண்டும். வாழை,  பருத்தி, மரவள்ளி, பூ உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தலைவராக எல்.நாகராஜ், செயலாள ராக சி.பாலகுமார், பொருளாளராக பி. ஆணைமுத்து உள்பட 25 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளர் சிங்காரவேலன்  நிறைவுரையாற்றினார். முன்னதாக வரவேற்பு குழு தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் வர வேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்ரீமதி  நன்றி கூறினார்.

;